மென்டிஸை விட அபாயமானவர் முரளி அவரே இந்திய அணிக்கு சவாலாயிருப்பார் *ஹர்பஜன் கூறுகிறார்

Read Time:1 Minute, 39 Second

அஜந்த மென்டிஸை விட முரளிதரன் தான் மிகவும் அபாயகரமானவரென ஹர்பஜன் சிங் தெரிவித்துள்ளார். ஐ.பி.எல். தொடரில் ஸ்ரீசாந்த் கன்னத்தில் அறைந்ததற்காக 5 போட்டி தடை விதிக்கப்பட்டு, பின் மீண்டும் அணியில் இடம்பிடித்துள்ள இந்திய வீரர் ஹர்பஜன், மென்டிஸை விட முரளிதரனே ஆபத்தானவர் என்கிறார். இது குறித்து ஹர்பஜன் அளித்த பேட்டியில்; மென்டிஸின் பந்துவீச்சு அற்புதமாக இருக்கிறது. இதுபோன்ற மந்திர பந்துவீச்சை டெனிஸ் பந்துகளில் செய்தவர்களை பார்த்திருக்கிறேன். ஆனால், கிரிக்கெட் பந்திலும் இதை சாதிக்க முடியுமென அவர் நிரூபித்துள்ளார். அவரிடமிருந்து கற்றுக்கொள்ள வேண்டியது நிறைய இருக்கிறது. மென்டிஸ் சிறந்த பந்துவீச்சாளராக இருந்தாலும் டெஸ்ட் தொடரில் முரளிதரன் தான் இந்திய அணிக்கு சவால் தரக்கூடியவர். மென்டிஸ் மற்றும் முரளியை ஒப்பிட முடியாது. மென்டிஸ் இப்போது தான் பந்துவீச்சில் கலக்கத் தொடங்கியிருக்கிறார். ஆனால், முரளி பல ஆண்டுகளாக சாதித்து வருகிறாரென்றும் ஹர்பஜன் தெரிவித்தார்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post தினந்தோறும் கிளாமர் படங்கள்..
Next post விடுதலைப் புலிகள் பிடியிலிருந்த இந்தியர் மீட்பு