குழந்தைக்குத் தாய்ப்பால் தரும் தாய், விரும்பினால் தனது பாலில் இருந்து நகை தயாரிக்க முடியும்
குழந்தைக்குத் தாய்ப்பால் தரும் தாய், விரும்பினால் தனது பாலில் இருந்து நகை தயாரிக்க முடியுமாம். இப்படி ஒரு நகை தயாரிப்பை பிரெஞ்சு நிறுவனம் டியூன்டே கண்டுபிடித்துள்ளது. தாய்ப்பாலுடன் வினிகரைச் சேர்த்து கொதிக்க வைத்தால், பாலில் உள்ள அதிக புரோட்டின் காரணமாக அந்தக் கலவை இறுகி பிளாஸ்டிக் வடிவைப் பெறுகிறதாம். பிறகு, அந்த கலவை ஆறுவதற்கு முன் எந்த வடிவில் வேண்டுமானாலும் உருவாக்கலாமாம். இப்படி தாய்ப்பாலில் இருந்து நகை ரகங்களைச் செய்து அசத்தியுள்ளது டியூன்டே நிறுவனம். தனது தயாரிப்புகளை அது செப்டம்பரில் நடைபெற உள்ள நகைக் கண்காட்சியில் பார்வைக்கு வைக்க உள்ளது. முதல் கட்டமாக குழந்தை முகம் வடிவில் டாலர், நெக்லஸ், பிரேஸ்லெட் ஆகிய நகைகளை அந்நிறுவனம் தயாரித்துள்ளது. தங்கம், வெள்ளி உட்பட இதர உலோகங்களில் செய்யப்படும் நகைகளுடன் இணைத்து டாலர், பென்டன்ட்டாக தாய்ப்பாலில் கிடைக்கும் பிளாஸ்டிக் வடிவ பொருளை பயன்படுத்தலாம் என்கிறது டியூன்டே நிறுவனம். தாய்ப்பாலில் இருந்து நகை தயாரிக்கும் பணிக்கு “பால் முத்து” என்று பெயரிட்டுள்ளது. இந்த தயாரிப்பு புதிய கண்டுபிடிப்பாக உள்ள நிலையில், வர்த்தக ரீதியாக இது சோதிக்கப்படவில்லை. தனது பாலில் இருந்து நகை தயாரித்து குழந்தைக்கு அணிவிக்க விரும்பும் தாய்மார்கள் இதில் ஆர்வம் காட்டக் கூடும் என்று அந்நிறுவனம் நம்பிக்கை தெரிவித்துள்ளது.
Average Rating