லண்டனில் பசவேஸ்வரா சிலைக்கு பிரதமர் மோடி மரியாதை!!(உலக செய்தி)

Read Time:1 Minute, 27 Second

பிரதமர் மோடி 4 நாள் பயணமாக நாளை இங்கிலாந்து செல்கிறார். லண்டனில் பிரதமர் தெரசா மேவை சந்தித்து பேசுகிறார். பின்னர், அங்கு நடைபெறும் காமன்வெல்த் தலைவர்கள் கூட்டத்தில் பங்கேற்கிறார். லண்டனில் உள்ள தேம்ஸ் நதிக்கரையில், 12ம் நாற்றாண்டைச் சேர்ந்த இந்திய தத்துவஞானி பசவேஸ்வராவுக்கு சிலை வைக்கப்பட்டுள்ளது. லிங்காயத் சமூகத்தைச் சேர்ந்த இவர், சாதிகளை ஒழிப்பதற்காக போராடிய சமூக சீர்திருத்தவாதி.

ஜனநாயக தலைவர்களில் ஒருவராக கருதப்பட்ட இவருக்கு நாடாளுமன்றத்தில், முன்னாள் பிரதமர் வாஜ்பாய் காலத்தில் சிலை வைக்கப்பட்டது. லண்டனில் உள்ள பசவேஸ்வரா அறக்கட்டளையின் தலைவராக இருப்பவர் லம்பேத் நீரஜ் படேல். இவர் லண்டன் பாரோ ஆப் லம்பேத் பகுதி மேயராக இருந்தவர். தனது பதவிக் காலத்தில் தேம்ஸ் நதியில் பசவேஸ்வராவுக்கு சிலை வைக்க அனுமதி பெற்றுள்ளார். அந்த சிலைக்கு பிரதமர் மோடி மலர் தூவி மரியாதை செலுத்த உள்ளார்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post பெண்கள் பல முறை உச்சம் அடைய முடியுமா?(அவ்வப்போது கிளாமர் )
Next post எப்பவாவது குடிச்சா என்ன தப்பு?!(மருத்துவம்)