காளி படத்தில் நான்கு கதாநாயகிகளில் ஒருவராக நடிக்கும் அம்ரிதா..!!

Read Time:2 Minute, 3 Second

காளி படத்தில் நான்கு கதாநாயகிகளில் ஒருவராக நடிக்கும் அம்ரிதா எந்தக் கலையையும் யாராலும் முழுவதுமாகக் கற்றுக்கொள்ள முடியாது என்று கூறியுள்ளார்.

படைவீரன் படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் கவனம் பெற்ற அம்ரிதா பல குறும்படங்களிலும் நடித்துள்ளார். வித்தியாசமான வகைமைகளில், நடிப்பதற்குச் சவாலான கதாபாத்திரங்களை அம்ரிதா ஆர்வத்துடன் எதிர்பார்த்துள்ளார். நடிப்புக்குத் தன்னைத் தயார் செய்துகொள்வது குறித்தும் அதற்காகத் தான் கடைபிடிக்கும் வழிமுறைகள் குறித்தும் அம்ரிதா சமீபத்தில் செய்தியாளர்களிடம் பகிர்ந்துகொண்டுள்ளார்.

“உங்கள் கூட்டை விட்டு வெளியேறிப் புதிய விஷயங்களை முயற்சிசெய்வது மிக முக்கியமானது. ஏனென்றால் வாழ்க்கை நமக்காக வைத்திருப்பவை என்ன என்பது நமக்குத் தெரியாது. படங்களில் நடிப்பதற்கு முன் நடிப்பிற்கான பயிற்சிப் பட்டறைகளில் கலந்துகொள்வேன். ஏனென்றால் எனக்குள் இருக்கும் பதற்றத்திலிருந்து நான் வெளியேற வேண்டும். நடிக்கும்போது புற உலகிலிருந்து என்னை விடுவித்துக்கொள்ளக் கற்றுக்கொண்டேன். எந்தக் கலையையும் முழுமையாக யாராலும் கற்றுக்கொள்ள முடியாது என நினைக்கிறேன். பயிற்சியினால் எல்லைகளை விரிவுபடுத்திக்கொள்ள முடியும்” என்று அம்ரிதா கூறியுள்ளார்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post ஸ்ரீதேவிக்கு தேசிய விருது – வலுக்கும் எதிர்ப்பு !!
Next post பணி நேரத்தில் கதவைப்பூட்டி கொண்டு நடனமாடிய அரசு ஊழியர்கள்..!! (வீடியோ)