வழக்கில் இருந்து விடுதலையான நடிகை !!

Read Time:1 Minute, 52 Second

முன்னாள் உலக அழகியும், இந்தி நடிகையுமான சுஷ்மிதாசென் வெளிநாட்டு கார் ஒன்றை ரூ.55 லட்சத்துக்கு வாங்கினார். இந்த காரை வெளிநாட்டில் இருந்து இறக்குமதி செய்தபோது வரிஏய்ப்பு செய்துவிட்டதாக, அவர் மீது சுங்க இலாகா வழக்கு தொடர்ந்தது.

இதையடுத்து, சுஷ்மிதாசென் அந்த காருக்கு வரியாக ரூ.20 லட்சம் கட்டினார். அது பழைய கார் என்று நினைத்து வாங்கியதாகவும், இதில் வரி ஏய்ப்பு நடந்தது தனக்கு தெரியாது என்றும் கூறினார். இந்த வழக்கில் நீதிமன்றத்தில் ஆஜர் ஆகி பதில் அளித்தார்.

தான் வரிகட்டிவிட்டதால், தன்னை வழக்கில் இருந்து விடுவிக்க வேண்டும். தனக்கு எதிரான பிடிவாரண்டை ரத்து செய்ய வேண்டும் என்று கோர்ட்டில் மனுதாக்கல் செய்தார். அதனை ஏற்று சுஷ்மிதாவை கைது செய்வதற்கான பிடிவாரண்டுக்கு கீழ் கோர்ட்டு இடைக்கால தடை விதித்தது.

இதை எதிர்த்து மத்திய புலனாய்வுத்துறை உயர்நீதி மன்றத்தில் மனு தாக்கல் செய்தது. இந்த மனு நேற்று முன்தினம் விசாரணைக்கு வந்தது. மனுவை விசாரித்த உயர் நீதிமன்றம், பிடிவாரண்டை நிரந்தரமாக ரத்து செய்து உத்தரவிட்டது. இதன்மூலம் சுஷ்மிதாசென் கார் வரிஏய்ப்பு வழக்கில் இருந்து விடுதலை பெற்றுள்ளார்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post கல்யாண ஆசையில் ஏமாந்த மூன்று பெண்கள்.. மேடையிலேயே கதறி அழுத ஆர்யா.. நடந்தது என்ன?..!! (வீடியோ)
Next post பாலியல் புகாரில் சிக்கிய அதிகாரியை நீக்க பிரதமர் முடிவு !!