குண்டான தோற்றத்திலும் நமீதா கிக் போஸ் !!(சினிமா செய்தி)
தமிழ் படங்களில் ரசிகர்களை கவரும் கவர்ச்சி ஹீரோயினாக வலம் வந்த நமீதா, மச்சான் என்று உறவு முறை வைத்து ரசிகர்களை அழைத்து கவர்ந்தார். கனகச்சித தோற்றத்தில் இருந்தவர் சில வருடங்களுக்கு பின் உடல் எடை அதிகரித்தார். இதனால் வாய்ப்புகள் குறைந்தன. இதையடுத்து உடல் எடை குறைக்க உடற்பயிற்சி, உணவு கட்டுப்பாடு மேற்கொண்டார். ஒரு கட்டத்தில் ஓரளவுக்கு எடை குறைத்து கச்சிதமான தோற்றத்துக்கு மாறினார். ஒன்றிரண்டு படங்களும் தேடி வந்தன. ஆனால் மீண்டும் வெயிட் போடத் தொடங்கினார்.
எவ்வளவுதான் உணவு கட்டுப்பாடு இருந்தாலும் பீட்சா பிரியரான நமீதா அதை ஒதுக்கி வைக்க முடியாமல் திண்டாடினார். பிறகு எடைபற்றி கவலைப்படாமல் பீட்சாவை ஒரு கைபார்க்கத் தொடங்கினார். வாய்ப்புக்காக காத்திருந்த நமீதாவுக்கு அது கைகூடவில்லை என்பதை உணர்ந்து திருமணம் செய்துகொள்ள முடிவு செய்தார். கடந்த ஆண்டு திருப்பதி கோயிலில் வீரேந்திர சவுத்ரி என்பவரை காதல் திருமணம் செய்துகொண்டார்.
புதிய படங்கள் எதுவும் இல்லையென்றாலும் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தனது படங்களை வெளியிட்டு ரசிகர்களுடன் தொடர்பிலேயே இருந்து வருகிறார் நமீதா. சில தினங்களுக்கு முன் தனது கவர்ச்சி படமொன்றை இன்ஸ்டாகிராமில் வெளியிட்டார். அதில் முன்பிருந்ததைவிட மேலும் குண்டான தோற்றத்துடன் காணப்பட்டார். அதன் அருகில் வெளியிட்டிருந்த மெசேஜில் ‘நீங்கள் யார் என்பதில் நம்பிக்கையுடன் இருங்கள். நான் எப்படி இருந்தாலும் என்னை நேசிக்கவே செய்கிறேன்’ என குறிப்பிட்டிருந்தார்.
குண்டான தோற்றத்தில் இருந்தாலும் தன் மீதான நம்பிக்கையை தவறவிட வில்லை என்பதை உணர்த்தும் விதமாக அவரது கருத்து இருந்தது. நமீதாவின் குண்டான தோற்றம் ரசிகர்களை பாதித்ததுபோல் தெரியவில்லை. அவரை பாராட்டியே கருத்துக்கள் வெளியிட்டிருக்கின்றனர். உங்களிடம் மேலும் அதிக கவர்ச்சியை எதிர்பார்க்கிறோம், ஹாட் அண்ட் ஸ்டிராங்காக இருக்கிறீர்கள், குண்டாவதே எனது குறிக்கோள், சிவப்பு உடையில் கிக்காக இருக்கிறீர்கள் என கருத்துக்கள் பகிர்ந்திருக்கின்றனர்.
Average Rating