என் பெயரை கெடுப்பதா? நிவேதா பெத்துராஜ் கோபம் !! (சினிமா செய்தி)
இதுகுறித்து நிவேதா கூறியதாவது: கடந்த சில நாட்களாக சில மீடியாக்களில் என்னைப்பற்றி தொடர்ச்சியாக விரும்பத்தகாத தவறான தகவல்கள் வந்த வண்ணமிருக்கிறது. யாரோ ஒரு நடிகையின் படத்தை வெளியிட்டு அதில் எனது பெயரை பதிவிடுகின்றனர். எனக்கு தெரிந்தவர்கள் இதுபற்றி என்னிடம் தெரிவித்தனர். இந்த செயல் எனது பெயரை கெடுக்கும் வகையில் இருப்பதுடன் என் மனதை புண்படுத்துவதாக உள்ளது. இந்த பிரச்னையை அணுகுவது தொடர்பாக நான் எனது வழக்கறிஞரிடம் பேசி வருகிறேன். நான் மீடியாக்கள் மீது நல்ல மரியாதை வைத்திருக்கிறேன்.
ஆனால் இதுபோன்ற காரியங்கள் என்னை மன உளைச்சலுக்கு ஆளாக்கியிருக்கிறது. எனவே சம்பந்தப்பட்டவர்கள் இதுபற்றி கவனத்தில் கொண்டு குறிப்பிட்ட படத்தில் இருக்கும் நடிகை யார் என்பதை அறிந்து அவரது பெயரை பயன்படுத்துங்கள். நாம் எல்லோரும் மனிதர்கள், நமக்கு குடும்பம் இருக்கிறது. இந்த சமுதாயத்தில் வாழ்ந்து கொண்டிருக்கிறோம் என்பதை மறந்துவிடக்கூடாது. இதேபோல் என்னைப்பற்றி தவறான தகவல் வெளியிட்டால் சட்டப்படி நடவடிக்கை எடுப்பேன். இவ்வாறு நிவேதா பெத்துராஜ் கூறி உள்ளார்.
Average Rating