பேன் மற்றும் பொடுகு தொல்லையை தீர்க்க வழிகள்!!( மகளிர் பக்கம்)

Read Time:3 Minute, 30 Second

வசம்பை தண்ணீர் விட்டு அரைத்துத் தலையில் நன்றாகத் தேய்த்து ஊற வைக்க வேண்டும். பிறகு குளிர்ந்த நீரில் தலையை நன்றாக அலச வேண்டும். தலையில் புண் அல்லது வெட்டுகாயம் இல்லாமல் இருந்தால் செலெனியம் சல்ஃபைடு அல்லது ஜிங்க் பைரிதியோன் என்ற மருந்துள்ள ஷாம்பை பயன்படுத்தி தலையை சுத்தம் செய்யலாம். இது பொடுகு பெருகுவதை தடுக்கும். புண் இருந்தால் இதை பயன்படுத்தக்கூடாது.

பொடுதலைக் கீரைச்சாற்றில் வசம்பு, வெள்ளை மிளகு இரண்டையும் சம அளவில் எடுத்து ஊற வைத்து உலர்த்திப் பொடியாக்கி ஒரு ஸ்பூன் பொடியை நல்லெண்ணெயில் குழைத்து தலைக்குத் தேய்த்து ஒரு மணி நேரம் ஊறவைத்து குளித்தால் பொடுகு தொல்லை தீரும்

“பிடிரோஸ்போரம் ஓவல்” என்ற நுண்ணுயிர் கிருமியால் பொடுகு ஏற்படுகிறது. இது அதிகமாக பரவி தலையில் அதிக அளவு பொடுகை உற்பத்தி செய்கிறது. இதனால் தலையில் அரிப்பு ஏற்பட்டு முடி உதிர்தல் அதிகரிக்கிறது. எனவே சாலிசிலிக் அமிலம் மற்றும் சல்பர் கலந்த ஷாம்புகளை பயன்படுத்தலாம்.

(சின்ன வெங்காயம்) கொஞ்சம் எடுத்து அரைத்து தலையில் தேய்த்து 15நிமிஷம் கழித்து குளித்து வந்தால் பொடுகு நீங்கும். வெங்காயத்தில் உள்ள சல்பர், பொடுகை நீக்க உதவுகிறது.

பாலுடன் மிளகு பவுடரை சேர்த்து தலையில் தேய்த்து 15 நிமிஷம் கழித்து குளிக்கவும்.

தலையில் தயிர் தேய்த்து குளிக்கலாம் அல்லது வாரம் ஒரு முறையாவது நல்லெண்ணெய் தேய்த்து தலையை அலசலாம்.

பசலை கீரையை அரைத்து தலையில் தேய்த்து குளித்து வந்தால் பொடுகு பிரச்னை நீங்கும்.

வெந்தய பவுடரை தலையில் தேய்த்து குளித்தால் பொடுகு தொல்லையும் தீரும் உடல் சூடும் குறையும்.

அருகம்புல் சாறு எடுத்து தேங்காய் எண்ணையுடன் சேர்த்து நன்றாக காய்ச்சி அப்புறம் ஆறவைத்து தினசரி இதனை தலையில் தேய்த்தால் பொடுகு மறையும்

வேப்பிலைசாறும் துளசி சாறும் கலந்து தலையில் தேய்த்துவரலாம். வசம்பு பவுடரை தேங்காய் எண்ணெயில் ஊறவைத்து தேய்க்கலாம்

தலைக்கு குளித்தபின்பு ஈரமான தலையில் கொஞ்சம் வினிகரை தண்ணீரில் கலந்து தலைக்கு குளித்து அதன்பின்பு துவட்டி கொள்ளலாம்.

மருதாணி இலையை அரைத்து அதனுடன் கொஞ்சம் தயிர்,எலுமிச்சை சாறு கலந்து தலையில் தேய்த்துவர பொடுகு தொல்லை நீங்கி முடி உதிர்வது கட்டுப்படுத்தப்படும்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post மாணவர்களின் தாக்குதலுக்குள்ளான ஆசிரியர் வைத்தியசாலையில்!!
Next post ஒரு மயிரும் புடுங்க முடியாது போலீஸ்காரர்ரை மிரட்டி எடுக்கும்!!(வீடியோ)