மாணவர்களின் தாக்குதலுக்குள்ளான ஆசிரியர் வைத்தியசாலையில்!!

Read Time:1 Minute, 38 Second

பாடசாலை மாணவர்கள் குழுவொன்றால் நடத்தப்பட்ட தாக்குதலில் காயமடைந்த ஆசிரியர் ஒருவர் சிகிச்சைக்காக ஆனமடுவ மாவட்ட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக அத தெரண செய்தியாளர் கூறினார்.

நேற்று பகல் பாடசாலைக்குள் வைத்து இந்த தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

ஆனமடுவ நகரத்தில் இருக்கின்ற பாடசாலையொன்றில் சேவையாற்றும் ஆசிரியர் ஒருவரே தாக்குதலில் காயமடைந்துள்ளார்.

தொழில்நுட்ப பாடம் கற்பிக்கும் ஆசிரியரே காயமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

13ம் ஆண்டு மாணவர்களுக்கு பாடம் எடுத்துக் கொண்டிருக்கும் போது, சம்பவம் ஒன்றிற்காக மாணவர் ஒருவரை தண்டித்த வேளை, அந்த வகுப்பில் இருந்த ஏனைய மாணவர்கள் இணைந்து ஆசிரியர் மீது தாக்குதல் நடத்தியுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இதேவேளை ஆசிரியரால் தண்டிக்கப்பட்ட மாணவனும் சிகிச்சைக்காக ஆனமடுவ மாவட்ட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

ஆனமடுவ பொலிஸார் சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post 12 இலட்சம் ரூபா பணத்தை கடித்து குதறிய எலிகள் மீது விசாரணை!!(உலக செய்தி)
Next post பேன் மற்றும் பொடுகு தொல்லையை தீர்க்க வழிகள்!!( மகளிர் பக்கம்)