தெற்கு அதிவேக வீதி விபத்தில் வௌிநாட்டு பெண் ஒருவரும் சிறுமியும் பலி!!

Read Time:1 Minute, 38 Second

தெற்கு அதிவேக வீதியில் குருந்துகஹஹெதெக்ம பிரதேசத்தில் இடம்பெற்ற விபத்து ஒன்றில் அவுஸ்திரேலிய நாட்டுப் பிரஜை ஒருவரும் 04 வயது சிறுமி ஒருவரும் உயிரிழந்துள்ளனர்.

இன்று அதிகாலை 05 மணியளவில் எல்பிட்டிய பொலிஸ் பிரிவில் குருந்துகஹஹெதெக்ம 65.1 கி.மி. எல் என்ற இடத்தில் கெட்டாவையில் இருந்து காலி நோக்கி சென்ற வேன் ஒன்று இவ்வாறு விபத்துக்கு உள்ளாகியுள்ளது.

தொழில்நுட்ப கோளாறு காரணமாக வீதியின் அருகில் நிறுத்தப்பட்டிருந்த லொறி ஒன்றின் பின் பக்கத்தில் மோதிய வேன் கவிழ்ந்து விபத்துக்குள்ளாகியுள்ளது.

விபத்தில் வேனில் பயணித்த அவுஸ்திரேலிய பிரஜைகள் நான்கு பேர் காயமடைந்து களுத்துறை, நாகொட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

பின்னர் 37 வயதுடைய அவுஸ்திரேலிய நாட்டுப் பிரஜை ஒருவரும் 04 வருடங்களும் 05 மாத வயதுடைய சிறுமி ஒருவரும் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

விபத்து தொடர்பாக எல்பிட்டிய பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post மர்மமான முறையில் உயிரிழந்த நபரின் சடலம் கண்டெடுப்பு!!
Next post 30 கஸ்டமர் வந்தாங்க யாருமே உங்கள மாறி கேக்கல உங்க நம்பருக்கு ஆபர் வந்துருக்குன்னு போன் பன்னா கவனம்!!(வீடியோ)