காதலரை பற்றி மனம் திறந்த நடிகை… !!(சினிமா செய்தி)

Read Time:1 Minute, 36 Second

ஆஸ்திரேலிய புகைப்படக்காரரான ப்யூ ஆன்ட்ரு நீபோன் என்பவர்தான் இலியானாவின் காதலன், கணவர் என்ற வதந்தி கடந்த வாரம் பரவியது. இவர்களுக்குத் திருமணமாகி குழந்தை பிறந்துவிட்டது என்றும் செய்திகள் வந்தன.

இதுபற்றி இலியானாவிடம் கேட்டபோது ‘எங்களுக்கு உண்மையில் திருமணமாகவில்லை. நான் கர்ப்பமாகவும் இல்லை. ஆனால் அப்படி ஒரு சம்பவம் நடந்தால் நான் சந்தோ‌ஷப்படுவேன். விரைவில் இது நடக்க வேண்டும் என்றும் விருப்பப்படுகிறேன். ஆனால் அதற்கு இன்னும் நேரம் இருக்கிறது.

எனது காதலர் என்னைப் புரிந்துகொண்டவராக இருக்கிறார். காதலில் நம்பிக்கை மிக முக்கியம். மன அழுத்தத்துக்கு ஆளாகும்போது நான் முதலில் தேடும் மனிதர் ஆன்ட்ருதான். பொதுவாக நான் மனஅழுத்தத்தில் இருக்கும்போது யாரையுமே பார்க்கமாட்டேன். வீட்டிலேயே அடைந்து கிடப்பேன்.

எல்லாவற்றையும் மீறி யாரேனும் என்னைத் தொடர்புகொள்ள நேரிட்டால் அவர்களை பயங்கரமாக திட்டிவிடுவேன். அதை முற்றிலும் மாற்றியது ஆன்ட்ருதான்’ என்று மனம் திறந்து இருக்கிறார்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post மாதவிலக்கு நாட்களின் சுகாதாரம்!!(மருத்துவம்)
Next post கிச்சன் டிப்ஸ்…!!(மகளிர் பக்கம்)