சம்பா தோசை!!( மகளிர் பக்கம் )

Read Time:1 Minute, 37 Second

என்னென்ன தேவை?

சம்பா பச்சரிசி,
கருப்பு உளுத்தம்பருப்பு,
மிளகு,
சீரகம்,
சுக்கு (பொடித்தது),
கட்டி பெருங்காயம்,
நெய்,
உப்பு.

எப்படிச் செய்வது?

தோல் நீக்காத உளுந்தை ஆட்டுக்கல்லில் ஆட்டி குருணை பதத்துக்கு அரைத்து ஒரு மணி நேரம் ஊறவைக்கவும். சம்பா பச்சரிசியை உரலிலிட்டு இரண்டும் கலக்கப்பட வேண்டும். அதை சிறிது நேரம் ஈரம் போக உலர்த்தி மீண்டும் அரைக்க வேண்டும். ஏழுபடி அரிசிக்கு இரண்டு படி உளுந்து சேர்த்து, தலா 150 கிராம் மிளகு, சீரகம், பொடித்த 50 கிராம் சுக்கு, 20 கிராம் பெருங்காயம் சேர்க்கவும்.

இத்துடன் கோவிலின் நூபுர கங்கை தீர்த்தத்தை சேர்த்து பிசைந்து எடுக்கின்றனர். ருசிக்கு இந்த தண்ணீரும் ஒரு காரணம். சிறிது நேரம் கழித்து இந்தக் கலவையை குழியான கிண்ணத்தில் எடுத்து சட்டியில் கொதிக்கும் பசு நெய்யில் வட்டமாக வார்த்து எடுக்கவேண்டும். 200 கிராம் அளவு கலவை வேக சரியாக இருக்கும். எண்ணெய் சட்டியில் தோசை மீது துளை இட்டால் நன்றாக வெந்து நெய்யும் வடையின் உள்ளே சென்று மணக்க வைக்கும்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post எள் சாதம்!!( மகளிர் பக்கம் )
Next post யூடியூபில் 1 கோடி பேர் பார்த்த வைரல் வீடியோ!!