அமெரிக்கா இடைக்கால தேர்தல் முடிவுகள் :அதிபர் ட்ரம்பின் குடியரசுக் கட்சி முன்னிலை!!

Read Time:1 Minute, 58 Second

அமெரிக்கா நாடாளுமன்றத்திற்கான இடைக்கால தேர்தலில் அதிபர் டொனால்டு ட்ரம்ப் சார்ந்துள்ள குடியரசு கட்சி முன்னிலை பெற்றுள்ளது. அமெரிக்காவில் பதவிக்காலம் முடிந்த நாடாளுமன்ற பிரதிநிதிகள் சபை உறுப்பினர்கள், செனட் சபை உறுப்பினர்கள் மாநில கவர்னர் பதவிகளுக்கான வாக்குப்பதிவு நேற்று நடைபெற்று முடிந்தது. தேர்தலில் பதிவான வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட்டு வருகிறது.

தற்போதைய நிலவரப்படி435 நாடாளுமன்ற உறுப்பினர் இடங்களில் 291 இடங்களுக்கான முடிவுகள் அறிவிக்கப்பட்டுள்ளன.அதில் ட்ரம்பின் குடியரசுக் கட்சி வேட்பாளர்கள் 151 இடங்களில் வெற்றி பெற்றுள்ளனர். ஜனநாயகக் கட்சி வேட்பாளர்கள் 140 இடங்களை பிடித்துள்ளனர்.

செனட் சபைக்கான தேர்தலில் மொத்தமுள்ள 100 இடங்களில் 91 இடங்களுக்கான முடிவுகள் அறிவிக்கப்பட்டுள்ளன.அதில் ட்ரம்பின் குடியரசுக் கட்சி வேட்பாளர்கள் 50 இடங்களில் வெற்றி பெற்றுள்ளனர். ஜனநாயகக் கட்சி வேட்பாளர்கள் 40 இடங்களை பிடித்துள்ளனர்.

அமெரிக்கா நாடாளுமன்றத்திற்கான இடைத் தேர்தல் முடிவுகள் அதிபர் ட்ரம்பிற்கு சாதகமாக வந்து கொண்டிருக்கிறது. இது ட்ரம்பின் கொள்கைகளை மக்கள் ஏற்றுக் கொண்டதன் அடையாளம் என அந்நாட்டு அரசியல் பார்வையாளர்கள் தெரிவிக்கின்றனர்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post #MeToo ஹேஷ்டேக்!!(மகளிர் பக்கம்)
Next post உடலுக்கு குளிர்ச்சி தரும் பானங்கள்!!(மருத்துவம்)