மன்மோகன் சிங்கை சந்திக்க முடியவில்லை: இலங்கை தமிழ் எம்பிக்கள் பேட்டி

Read Time:1 Minute, 13 Second

Tna.sampanthan.jpgஇலங்கை தமிழர்கள் பிரச்சினை தொடர்பாக பிரதமர் மன்மோகன் சிங்கை சந்திக்கச் சென்ற அந்நாட்டு தமிழ் எம்பிக்கள் மன்மோகன் சிங்கை சந்திக்க முடியாமல் சென்னை திரும்பினார். இதுகுறித்து சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் அவர்கள் கூறியதாவது: தில்லியில் பாதுகாப்புத்துறை செயலாளர் நாராயணன், வெளியுறவுத்துறை இணை அமைச்சர் அகமது உள்ளிட்டவர்களை சந்தித்து இலங்கையில் தமிழர்களின் நிலை குறித்து விளக்கினோம்.

இலங்கை தமிழர்களுக்கு மனிதாபிமான அடிப்படையில் உதவி செய்ய வேண்டும் என அவர்களை கேட்டுக்கொண்டோம் என்றனர்.

மேலும் இவ்விவகாரம் தொடர்பாக மன்மோகன் சிங்கை சந்திக்கத்தான் நாங்கள் இந்தியா வந்தோம். ஆனால் அவரை சந்திக்க சரியான ஏற்பாடுகள் செய்யப்படவில்லை எனத் தெரிவித்தனர்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %
Previous post பின்லேடன், டைபாய்டு காய்ச்சலால் இறந்துவிட்டானா? உறுதி செய்ய அமெரிக்கா, பாகிஸ்தான் மறுப்பு
Next post மிகவிரைவில் மீண்டும் அதிரடி.கொம் (www.athirady.com)