பார்வர்ட் பிளாக்கில் இருந்து கார்த்திக் நீக்கம்!!

Read Time:4 Minute, 16 Second

karthik011.jpgபார்வர்டு பிளாக் கட்சியின் தமிழக தலைவரும், பொதுச் செயலாளருமான நடிகர் கார்த்திக் கட்சியில் இருந்து நீக்கப்பட்டுள்ளார். கட்சியின் அடிப்படை உறுப்பினர் பதவியில் இருந்தும் அவர் நீக்கப்படுவதாக கட்சி மேலிடம் அறிவித்துள்ளது. இதுகுறித்து அகில இந்திய பார்வர்டு பிளாக் கட்சியின் (பிஸ்வாஸ் பிரிவு) பொதுச் செயலாளர் தேவராஜன் கூறுகையில்,

பார்வர்டு பிளாக் கட்சியின் தமிழக தலைவர் மற்றும் பொதுச் செயலாளராக நடிகர் கார்த்திக் நியமிக்கப்பட்ட பின்னர், கட்சியின் மத்தியக் குழு கூட்டங்களில் அவர் கலந்து கொள்ளவில்லை. கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகளையும் அவர் நடைமுறைப்படுத்தவில்லை.

கட்சித் தொண்டர்களை சந்திப்பதும் இல்லை. மேலும் கட்சி மேலிடத்துடன் ஆலோசிக்காமல் தன்னிச்சையாகவும் செயல்பட்டு வருகிறார். கட்சியை அவரால் வழி நடத்த முடியவில்லை.

தமிழகத்தில் பார்வர்டு பிளாக் கட்சி முற்றிலும் சீர்குலைந்து விட்டது. இதனால் அடிப்படை உறுப்பினர் பதவி உட்பட கட்சியின் அனைத்து பதவிகளில் இருந்தும் கார்த்திக்கை நீக்க கட்சியின் மத்தியக் குழு முடிவு செய்துள்ளது.

மதுரையில் அடுத்த மாதம் 28, 29ம் தேதிகளில் கட்சியின் மத்தியக் குழு கூட்டம் நடைபெறுக்கிறது. இதில் புதிய மாநில குழு அமைக்கப்படும். கார்த்திக்கால் கட்சியில் ஏற்பட்ட எல்லா பிரச்சனைகளும் விரைவில் தீர்க்கப்படும். கட்சியினர் யாரும், கார்த்திக்குடன் எவ்வித தொடர்பும் வைத்துக் கொள்ள வேண்டாம் என்றார்.

கடந்த சட்டமன்றத் தேர்தலின்போது தான் பிஸ்வாஸ் தலைமையிலான அகில இந்திய பார்வர்ட் பிளாக் கட்சியின் தமிழக தலைவராக கார்த்திக் நியமிக்கப்பட்டார். அதுவரை தலைவராக இருந்த சந்தானத்தை பிஸ்வாஸ் நீக்கினார்.

சட்டமன்றத் தேர்தலில் திமுகவுடன் கூட்டணி வைக்கலாம் என பிஸ்வாஸ் கூற, அதிமுகவுடன் கூட்டணி வைக்கலாம் என்றார் கார்த்திக்.

ஆனால், பிஸ்வாஸை கூட்டிக் கொண்டு போயஸ் கார்டனுக்குப் போன கார்த்திக்குக்கு ஜெயலலிதாவிடம் அவமானமே மிஞ்சியது. இருவரையும் நிற்க வைத்து, ஒருமையில் பேசி விரட்டி அடித்து அதிமுக தலைமை. இதனால் பிஸ்வாசுக்கு நெஞ்சு வலியே வந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட வேண்டிய நிலை ஏற்பட்டது.

கார்த்திக் தனித்துப் போட்டி என்று களமிறங்கி தேர்தலில் படுதோல்வி கண்டார். இப்போது உள்ளாசித் தேர்தலில் தனித்துப் போட்டி அறிவித்திருந்தார். இந் நிலையில் அவரை கட்சியை விட்டு நீக்கியுள்ளதாக பொதுச் செயலாளர் தேவராஜன் கூறியுள்ளார்.

ஆனால், தலைவர் பிஸ்வாஸ் இதுவரை ஏதும் சொல்லவில்லை. இதனால் இது பிஸ்வாசின் முடிவா அல்லது கட்சியில் உள்ள கார்த்திக் எதிர்ப்பாளர்களின் முடிவா என்று தெரியாத அளவுக்கு குழப்பம நிலவுகிறது.

கார்த்திக் என்றாலே குழப்பம் தானே?…

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %
Previous post மக்களின் விடுதலைக்காய் மண்ணின் வித்தான கேணல் ரெஜியின் இரண்டாம் ஆண்டு நினைவு
Next post எத்தியோப்பிய படையினர் சோமாலியாவினை நோக்கி பயணம்