மன அமைதிக்கு சிறந்தது சவாசனம்!! (மகளிர் பக்கம்)

Read Time:3 Minute, 21 Second

அதிக பரபரப்பு மற்றும் மன அழுத்தத்தால் பாதிக்கப்படும் பெண்கள் அதற்காக வேறு எதையாவது செய்வதை விட, இந்த சவாசனத்தை செய்யலாம். இந்த ஆசனம் மூலம் உடல் தணிவடைதல், மன அமைதி, உடலுக்கு சீரான ஓய்வு கிடைக்கும். மிகவும் எளிதான ஆசனமாகவும், வீட்டில் எளிதாக செய்யவும் இயலும்.

சவாசனம்

காலையில் எழுந்து பல் துலக்கி காலைக் கடன்களை முடித்து விட்டு இந்த ஆசனத்தை செய்யலாம். தரையில் விரிப்பை விரித்து உயிரற்ற உடல் எவ்வாறு சலனமின்றி இருக்குமோ அதே போல படுக்க வேண்டும். பார்வைகள் சலனமின்றி உடலும் உள்ளமும் தளர்ந்த நிலையில் மேல் நோக்கி பார்க்க வேண்டும்.

மூன்று நிமிடங்கள் வரை அவ்வாறு இருந்த பின் பாதங்களை வலது இடதாக அசைத்து பின் எழுந்திருக்க வேண்டும். இந்த ஆசனம் செய்வதால் மன இறுக்கம் அகலும். பெண்களுக்கு ஏற்படும் முதுகு தண்டு வலி, கழுத்து வலிகள் குணமாகும்.
இந்த ஆசனத்தை தவறாது செய்து வந்தால் ஆரோக்கியமும், சுறுசுறுப்பும் கிடைக்கும். மன அமைதி கிட்டும்.

செய்முறை

வி‌ரி‌ப்‌பி‌ல் மல்லாக்க படுக்கவும். தலை ‌வி‌ரி‌ப்‌பி‌ன் மேல் இருக்குமாறு பார்த்துக்கொள்ளவும். கால்களை சற்றே அகல விரித்து வைக்கவும். துடைகளை விட்டு விலகியிருக்குமாறு கைகள் முழுதையும் இரு பக்கமும் நீட்டவும். உள்ளங்கைகள் மேல் நோக்கி இருக்கவேண்டும். மூச்சுக்காற்றை இயல்பாக மூக்கு வழியாக சுவாசிக்கவும். உடல், மனம் ஆகியவற்றின் நினைவின்றி உறக்க நிலையில் இருக்க வேண்டும். இது போன்ற சாந்தமான நிலையில் நீங்கள் எதையும் உணரமாட்டீர்கள், எதையும் கேட்கமாட்டீர்கள், புலன் உணர்வு இருக்காது.

பலன்கள்

நடுத்தர வயதினோர் வேலைப்பளுவால் அடையும் மன, உடல் சோர்வுகளை போக்க இந்த ஆசனம் பெரிதும் உதவும். சவாசனத்தை பகல் நேரத்தில் குறைந்த இடைவெளி நேரத்தில் அதிகமாக செய்யவும். இதனால் பகலில் தூக்கத்தை கட்டுப்படுத்த முடியும், மேலும் இரவில் தேவைப்பட்டால் கண் விழிக்கவும் உதவிடும்.

ஓய்வின்மை, பாதுகாப்பின்மையால் வெறுப்பு, கவலை உளைச்சல் மற்றும் பயத்திலிருந்து காக்கும். மன உறுதியை வளர்த்துக் கொள்வீர்கள். வயோதிகம் கட்டுப்படுத்தப்படும். சக்தி அதிகரிக்கும். தூக்கமின்மை விலகும். தூக்க மாத்திரைகளின் தேவைகள் குறையும்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post உடலுக்கு உரமூட்டும் கேழ்வரகு!! (மருத்துவம்)
Next post AC இல்லாமல் ரூம் சில்லுன்னு வைக்கணுமா? ( வீடியோ)