போர் விமானம் கடலில் விழுந்து நொறுங்கியது!! (உலக செய்தி)

Read Time:1 Minute, 40 Second

ஜப்பானின் ஹோன்சு மாகாணத்தில் உள்ள மிசாவா நகரில் விமானப்படை தளம் உள்ளது. இங்கிருந்து நேற்று முன்தினம் மாலை எப்-35 ரக போர் விமானம் ஒன்று வழக்கமான பயிற்சிக்காக புறப்பட்டு சென்றது. விமானத்தில் விமானியை தவிர வேறுயாரும் இல்லை.

விமானம் புறப்பட்டு சென்ற ½ மணி நேரத்துக்கு பிறகு திடீரென கட்டுப்பாட்டு அறையுடனான இணைப்பு துண்டிக்கப்பட்டது. அதனை தொடர்ந்து மாயமான விமானத்தை தேடும் பணிகள் முடுக்கிவிடப்பட்டன.

இந்த நிலையில், எப்-35 போர் விமானம் பசிபிக் கடல் பகுதியில் விழுந்து நொறுங்கியது தெரியவந்தது. நேற்று அதிகாலையில் அந்த விமானத்தின் சிதைவுகள் கண்டெடுக்கப்பட்டன. அதே சமயம் விமானத்தில் சென்ற விமானியின் கதி என்ன ஆனது? என்பது தெரியவில்லை. அவரை தேடும் பணிகள் நடந்து வருகிறது.

இந்த விமானம் விமானப்படையில் இணைத்துக்கொள்ளப்பட்டு ஒரு வருடத்திற்கும் குறைவான காலத்தில் இந்த விபத்து ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. விபத்துக்கான காரணம் என்ன என்பது உடனடியாக தெரியவில்லை. இது குறித்து விசாரிக்கப்படுகிறது.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post நம் வாக்கு நம் உரிமை ———- நல்லவரைப் பார்த்து!! (கட்டுரை)
Next post மாணவியின் கழுத்தில் ஏறி நின்ற நபர்! நடந்ததை பயப்படாமல் பாருங்க!! (வீடியோ)