ஒரு தாயின் குரல்!! (மருத்துவம்)

Read Time:2 Minute, 36 Second

கருவிலேயே கேட்கும் திறனைப் பெற்றுவிடும் குழந்தை, தன் தாயின் குரலை எளிதில் அடையாளம் கண்டு கொள்வதில் வியப்பில்லைதான். ஆனால், தாயின் குரலைக் கேட்கும்போது, குழந்தைகளின் மூளையிலுள்ள பல்வேறு இணைப்புகளும் செயல்திறன் பெறுகின்றனவாம். இது சற்று புதிய விஷயம்தானே! 7 முதல் 12 வயதுள்ள 24 குழந்தை களிடத்தில், அவர்களது தாயின் குரலையும், அறிமுகமில்லாத மூன்று பெண்களின் குரல்களையும் பதிவு செய்து போட்டுக் காண்பித்து, அவர்களது மூளையின் ஸ்கேனை ஆய்வு செய்தனர் ஆராய்ச்சியாளர்கள்.

ஒரு வினாடிக்கு உள்ளாகவே, தாயின் குரலை 97 சதவிகிதம் துல்லியமாக அடையாளம் கண்டு கொண்டன அந்தக் குழந்தைகள். மற்றவர்களின் குரலைவிட, தங்கள் தாயின் குரலை கேட்ட உடனேயே, குழந்தைகளின் செவிப்புலத்துக்கு அருகில் உள்ள மூளைப்பகுதிகளிலும், அவர்களது முகத்திலும் உணர்ச்சி கொந்தளிப்புகள் தெரிந்ததாம்.‘தாயின் குரலை கேட்கும் நேரத்தில், அதிக அளவில் மூளை இணைப்புகளைப் பெறும் குழந்தைகள் சிறந்த சமூக தகவல் தொடர்புத் திறன் உடையவர்களாக இருக்கிறார்கள்.

இந்த கண்டுபிடிப்பு, ஆட்டிசம் பாதித்த குழந்தைகளிடத்தில் உள்ள சமூகத் தொடர்பின்மை குறைபாடுகளை எளிதில் கண்டறிய துணைபுரியும்’ என்கிறார்கள் ஆய்வாளர்கள்.‘ஒரு தாயின் குரல், குழந்தையின் மூளையில் உள்ள பல பாகங்களிலும் எதிரொலிப்பதை பார்க்கும்போது மிக ஆச்சரியமாக இருக்கிறது’ என்கிறார் ஸ்டான்ஃபோர்டு மருத்துவ பல்கலைக்கழகத்தின் மூத்த எழுத்தாளரான வினோத் மேனன். மனிதனின் சமூகத் தொடர்பு குறியீடுகளில் குரல் முக்கியத்துவம் பெறுகிறது. ‘தாய்’ என்ற சொல்லே மகத்துவம் பெறும்போது ‘தாயின் சொல்’எத்தனை வலிமையானது!

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post அவர் நல்ல பாடகர் சிறந்த ஓவியர்.. :டூலெட் தயாரிப்பாளர் பிரேமா செழியன் ஓப்பன் டாக்!! (மகளிர் பக்கம்)
Next post எமது குழந்தைகளின் எதிர்காலம்: வளமா, வங்குரோத்தா? (கட்டுரை)