‘ஒசாமா உயிருடன் உள்ளார்’அரேபிய டிவி
அல்கொய்தா தலைவன் ஒசாமா பின்லேடன் இறக்கவில்லை என அல்அரேபியா தொலைக்காட்சி தெரிவித்துள்ளது. பின் லேடன் பாகிஸ்தானில் கடந்த மாதம் டைபாய்டு காய்ச்சலால் பலியாகிவிட்டதாக பிரான்ஸ் நாட்டு பத்திரிகை கூறியது.சௌதி அரேபிய உளவுப் பிரிவு இந்தத் தகவலை தெரிவித்ததாக பிரான்ஸ் நாட்டு உளவுப் பிரிவு தெரிவித்தது. இந்த உளவுப் பிரிவின் ரகசிய அறிக்கையை கைப்பற்றிய பிரான்ஸ் பத்திரிக்கை ஒசாமா குறித்த செய்தியை வெளியிட்டது. ஆனால், இந்தத் தகவலை அமெரிக்கா, சௌதி அரேபியா, பிரான்ஸ் அரசுகள் உறுதிப்படுத்த மறுத்தன.
அதே நேரத்தில் தனது நாட்டின் உளவுப் பிரிவின் அறிக்கை எப்படி பத்திரிக்கு லீக் ஆனது என்று விசாரணைக்கு பிரான்ஸ் அரசு உத்தரவிட்டது. இதனால் அப்படிப்பட்ட அறிக்கை சமர்பிக்கப்பட்டது உண்மையே என்று உறுதியானது. இதனால் கதி குறித்து உலகம் முழுவதும் கேள்வி எழுந்தது.
இந்நிலையில், பின்லேடன் உயிரோடு இருப்பதாக தலிபான் தலைவர் ஒருவர் தங்களிடம் தெரிவித்ததாக துபாயின் அல்அரேபியா தொலைக்காட்சி கூறியுள்ளது. இது தொடர்பாக முழு விவரங்கள் விரைவில் வெளியிடப்படும் என்றும் அந்தத் தொலைக்காட்சி கூறியுள்ளது.