மன்னாரில் விடுதலைப்புலிகள் அலுவலகம் மீது இலங்கை விமானம் குண்டுவீச்சு
இலங்கையில் விடுதலைப்புலிகளின் ஆதிக்கத்தில் இருந்த சம்பூர் பகுதியை பிடித்த ராணுவம் மற்ற பகுதிகளை பிடிக்கவும் தாக்குதல் நடத்தி வருகிறது. நேற்று வவுனியா அருகே பூவரசன்குளம் கிராமத்தில் பயிற்சியில் ஈடுபட்டு இருந்த விமானப்படையினர் மீது விடுதலைப்புலிகள் கண்ணி வெடி தாக்குதல் நடத்தினர். இதில் விமானப்படை வீரர் ஒருவர் பலியானார். இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் இலங்கை விமா னப்படையினர் திடீர் தாக்கு தல் நடத்தினார்கள்.
அதி நவீன சூப்பர் சோனிக் போர் விமானத்தை மன்னார் பகுதிக்கு அனுப்பியது. இந்த விமானம் விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டில் உள்ள பகுதிகள் மீது சரமாரி குண்டு வீசியது. விடுதலைப்புலிகளின் முகாம்கள், விடுதலைப்புலிகளின் நிர்வாக அலுவலகங்கள் ஆகியவற்றின் மீது சரமாரியாக குண்டு வீசியது.
அதன் அருகே உள்ள வெள்ளாங்குளம் கிராமம் மீது குண்டு மழை பொழிந்தது. இதில் விடுதலைப்புலிகளின் சேதவிவரம் பற்றி தகவல் ஏதும் இல்லை.