இந்தியாவுடன் நாகரீகமான உறவு ஏற்படும் : பிரதமர் இம்ரான்கான் பேட்டி!! (உலக செய்தி)

Read Time:2 Minute, 15 Second

இந்தியாவுடன் நல்லுறவு இல்லாததுதான் பாகிஸ்தானின் ஒரே பிரச்னை என்று அந்நாட்டு பிரதமர் இம்ரான் கான் தெரிவித்துள்ளார். பாகிஸ்தானில் குவாடார் உள்ளிட்ட துறைமுகங்களின் மேம்பாடு, உள்கட்டமைப்பு வசதிகள் மற்றும் சிறப்பு பொருளாதார மண்டலங்கள் அமைய நிதியுதவி மற்றும் தொழில்நுட்ப உதவிகளை சீனா செய்து வருகிறது. தற்போது கடன் சுமை மற்றும் நிதி நெருக்கடியில் சிக்கித் தவிக்கும் பாகிஸ்தான் அரசு சர்வதேச நிதியத்தின் உதவியை நாடியுள்ளது. சீனா, மலேசியா ஆகிய சில நாடுகள் பாகிஸ்தானுக்கு குறுகியகால நிதியுதவி செய்ய முன்வந்துள்ளன.

இந்நிலையில், பாகிஸ்தான் பிரதமராக பதவியேற்ற பின்னர் இரண்டாவது முறையாக அரசு முறை பயணமாக இம்ரான் கான் சீனா சென்றுள்ளார். தலைநகர் பீஜிங்-கில் இன்று சீனப் பிரதமர் லி கெக்கியாங்-ஐ சந்தித்து இருநாடுகளுக்கு இடையிலான பல்வேறு முக்கிய விவகாரங்கள் தொடர்பாக ஆலோசனை நடத்தினார்.

இந்த ஆலோசனைக்கு பின்னர் இருவரும் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தனர். சீனா-பாகிஸ்தான் இடையிலான பொருளாதார மண்டலத்தின் கட்டமைப்பு பணிகளை விரைவுப்படுத்தவும் இருநாடுகளுக்கு இடையிலான எரிசக்தி, சுற்றுச்சூழல் பாதுகாப்பு, தொழில்துறை அபிவிருத்தி மற்றும் பாகிஸ்தான் மக்களின் வாழ்வாதாரத்துக்கு தேவையான அனைத்து உதவிகளையும் செய்யவும் சீன அரசு தயாராக இருப்பதாக பிரதமர் லி கெக்கியாங் குறிப்பிட்டார்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post நாடு முழுவதும் 71 தொகுதிகளில் நாளை 4ம் கட்ட வாக்குப்பதிவு!! (உலக செய்தி)
Next post கலிபோர்னியாவில் யூதமத கோவிலில் துப்பாக்கி சூடு: பெண் பலி; 3 பேர் படுகாயம்!! (உலக செய்தி)