கலிபோர்னியாவில் யூதமத கோவிலில் துப்பாக்கி சூடு: பெண் பலி; 3 பேர் படுகாயம்!! (உலக செய்தி)

Read Time:1 Minute, 45 Second

அமெரிக்காவின் கலிபோர்னியாவில் நடந்த துப்பாக்கி சூட்டில் ஒருவர் பலியாகினார். அமெரிக்காவின் கலிபோர்னியாவில் உள்ள போவே நகரில் யூதமத கோவில் ஒன்றில் மர்ம நபர் ஒருவர் துப்பாக்கி சூடு நடத்தினார். இதில் 4 பேர் காயம் அடைந்தனர். அவர்கள் அருகில் உள்ள மருத்துவமனைக்கு உடனடியாக கொண்டு செல்லப்பட்டனர். அங்கு சிகிச்சை பலனின்றி பெண் ஒருவர் உயிரிழந்தார். மேலும் படுகாயம் அடைந்த இளம்பெண் மற்றும் 2 ஆண்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த துப்பாக்கி சூட்டில் ஈடுபட்ட நபர் 19 வயதே ஆன ஜான் எர்னஸ்ட் என அடையாளம் தெரிந்துள்ளது.

கடந்த மாதம் மசூதியில் நடந்த தாக்குதலில் இந்த நபருக்கு உள்ள தொடர்பு பற்றி விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. விசாரணையில் அவர் எர்னஸ்ட் ஏ.ஆர். 15 ரக துப்பாக்கியை பயன்படுத்தி உள்ளது தெரிய வந்துள்ளது. அமெரிக்காவில் நடந்துள்ள பல துப்பாக்கி சூடு சம்பவங்களில் இந்த ரக துப்பாக்கிகள் பயன்படுத்தப்பட்டுள்ளன. கடந்த 6 மாதங்களுக்கு முன் பிட்ஸ்பர்க் நகரில் இதேபோன்று யூதமத கோவில் ஒன்றில் நடந்த தாக்குதலில் 11 பேர் கொல்லப்பட்டனர்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post இந்தியாவுடன் நாகரீகமான உறவு ஏற்படும் : பிரதமர் இம்ரான்கான் பேட்டி!! (உலக செய்தி)
Next post வலைதளங்களில் கசியும் ரஜினி புகைப்படங்கள் !! (சினிமா செய்தி)