ரஜினி ஸ்டைல் கிரிக்கெட் !! (சினிமா செய்தி)
தலையில் ஹெல்மெட், கைகளில் கிளவுஸ், கால்களில் பேட் இல்லாமல் ஆடும் இந்த விளையாட்டு ரஜினி ஸ்டைல் கிரிக்கெட்டாகிவிட்டது. அவர் நடிக்கும் தர்பார் பட ஷூட்டிங் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் நாடாளுமன்ற தேர்தலுக்கு முன் மும்பையில் தொடங்கியது. தேர்தல் நாளான்று சென்னை வந்த ரஜினி தனது வாக்கை பதிவு செய்துவிட்டு மீண்டும் படப்பிடிப்புக்கு புறப்பட்டு சென்றார். முன்னதாக ரஜினி மட்டும் படப்பிடிப்பிலிருந்த நிலையில் தற்போது நயன் தாராவும் பங்கேற்றிருக்கிறார்.
மும்பை பூங்கா பகுதி ஒன்றில் ரஜினிகாந்த் கிரிக்கெட் விளையாடும் புகைப்படம் நெட்டில் வலம் வருகிறது. அருகில் நயன்தாரா, யோகிபாபு ஆகியோரும் இருக்கின்றனர். இது படத்திற்கான காட்சியா அல்லது படப்பிடிப்பு இடைவேளயில் கிடைத்த ஓய்வு நேரத்தில் ஜாலியாக ரஜினி விளையாடிய நிகழ்வா என்பதுபற்றி தெரியவில்லை. எது எப்படி இருந்தாலும் ரஜினியின் தர்பார் ஸ்டில்கள் அடிக்கடி லீக் ஆவது படக்குழுவுக்கு அதிர்ச்சியை தந்திருக்கிறது.
Average Rating