ஜப்பானில் இளம் வயது பிரதமர் பதவி ஏற்கிறார்
ஜப்பானின் அனுபவம் வாய்ந்த தலைவராக கருதப்படும் பிரதமர் ஜூனிசிரோ கொய்சுமிக்கு பதிலாக இரண்டாம் உலகப்போருக்கு பின்னர் பிறந்த 52 வயதுடைய ஷின்ஜோ ஆபி என்பவர் பிரதமராகிறார். இவர் எதையும் வெளிப்படையாக பேசும் இளம் பிரதமராவார்.
1947_ம் ஆண்டு ஜப்பானில் வலுக்கட்டாயமாக அமெரிக்காவால் திணிக்கப்பட்ட சமாதான அரசியல் சட்டத்தை திருத்த இந்த புதிய இளம் பிரதமர் ஆபி உறுதிபூண்டுள்ளார். மூன்றாம் பரம்பரையைச் சேர்ந்த ஆபியின் தந்தை,ஜப்பானின் பிரதமராக 4 முறை முயன்று தோல்வி அடைந்தார்.
தந்தையில் ஆசையை மகன் ஆபி நிறைவேற்றியுள்ளார். ஆளும் லிபரல் ஜனநாயகட்சி சார்பாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள ஆபியின் பெயரை பிரதமர் என்று அறிவித்தவுடன் அவரது தந்தை பாராளுமன்றத்தில் கைதட்டி வரவேற்றார்.
ஜப்பானில் புதிய பிரதமர் ஆபி தலைமையில் புதிய அத்தியாயம் தொடங்குகிறது என்று ஆளும் கட்சியின் பொதுச்செயலாளராக நியமிக்கப்பட்டுள்ள நாககாவா தெரிவித்துள்ளார். ஆபி தலைமையில் ஜப்பான் நாட்டு மக்களுக்கு நாங்கள் அளித்துள்ள உறுதிமொழிகளை நிறைவேற்றுவோம் என்றும் நாககாவா மேலும் கூறினார்.