தெ. ஆப்பிரிக்க விமானத்தில் திருமணம் செய்து கொண்ட அமெரிக்க காதலர்கள்
அமெரிக்காவைச் சேர்ந்த காதலர்கள் தென்னாப்பிரிக்க விமானத்தில் திருமணம் செய்து கொண்டனர். இந்தத் திருமணம் ஜோகன்னஸ்பர்க்கில் இருந்து கேப்டவுன் சென்ற எஸ்ஏ343 விமானத்தில் கடல் மட்டத்தில் இருந்து 30 ஆயிரம் அடி உயரத்தில் கடந்த வெள்ளிக்கிழமை நடந்தது. அட்லாண்டா மாநிலம் ஜார்ஜியா நகரைச் சேர்ந்த சூஸி டேவிஸýம் டெர்ரிக்கும் பாவெல்கோவுக்கும் 4 ஆண்டுகளுக்கு முன்பு இதே விமானத்தில் கண்டதும் காதல் ஏற்பட்டது.
“விமானம் ஜோகன்னஸ்பர்க்கில் கிளம்பி கேப்டவுன் சென்றடையும் வரை டேவிûஸ வைத்த கண் வாங்காமல் பார்த்துக் கொண்டே இருந்தேன். கண்டதும் அவரைக் காதலித்தேன்’ என்று பாவெல்கோ கூறினார்.
தென்னாப்பிரிக்க விமானம் விண்ணில் பறந்து கொண்டிருக்கும் போது நடந்த முதலாவது காதல் திருமணம் இதுதான்.
திருமணத் தம்பதிகளின் உறவினர்கள், நண்பர்கள் 30 பேர் கலந்து கொண்டு அவர்களை வாழ்த்தினர். இந்த விமானத்தில் சென்ற பிற பயணிகளுக்கும் புதுமணத் தம்பதிகளுக்கு வாழ்த்துத் தெரிவித்தனர்.
தென்னாப்பிரிக்க விமான நிறுவனமும் தனது பங்காக அலங்கரிக்கப்பட்ட காகிதத்தில் மடிக்கப்பட்டிருந்த சாக்லேட், சூயிங்கத்தையும் அனைவருக்கும் வழங்கி மகிழ்ச்சியைப் பறிமாறிக் கொண்டது.