ஓசோன் சிகிச்சை!! (மருத்துவம்)

Read Time:2 Minute, 50 Second

தற்போது ஓசோன் சிகிச்சை முதியவர்களிடத்தில் ஒரு முன்னெடுத்த சிகிச்சை முறையாக இருக்கிறது. குறிப்பாக, முதியோர்களிடத்தில் ஏற்படும் வயது மூப்பு கோளாறுகளான கண்புரை சிதைவுகள், வாதநோய் மற்றும் கீல்வாதம் போன்றவற்றிற்கு நல்ல பலன் தரும் சிகிச்சை என்றும் குறிப்பிடுகிறார்கள். இதுபற்றி தெரிந்துகொள்வோம்…

ஓசோன்(Ozone) என்பது மூன்று ஆக்ஸிஜன் அணுக்களால் ஆன நிறமற்ற வாயு ஆகும். தற்போது உடலின் ஆக்ஸிஜனின் பயன்பாட்டை மேம்படுத்துவதற்கும் நோய் எதிர்ப்பு மண்டலத்தை செயல்படுத்துவதற்கும் இதை ஒரு மாற்று சிகிச்சையாக பயன்படுத்துகிறார்கள்.

பொதுவாக மருத்துவத்தில் பாக்டீரியா, வைரஸ்கள், பூஞ்சை, ஈஸ்ட் மற்றும் புரோட்டோசோவா(Protozoa) ஆகிய கிருமிகளின் விளைவுகளை கட்டுப்படுத்துவதன் மூலம் நோய்களை கிருமி நீக்கம் செய்து சிகிச்சையளிக்க ஓசோன் சிகிச்சை பயன்படுத்தப்படுகிறது.

இந்த சிகிச்சை முறையில் O3(Ozone) என்ற Super Active Molecule -ஐ உடைக்கிறார்கள். அது O2 ஆக்ஸிஜனாகவும், O+ என பிரிகிறது. ஒவ்வொரு செல்லிலும் உள்ள Mitochondria எனச்சொல்லப்படும் ஆற்றல் மூலத்தில் எதிர்வினை புரிகிறது. அதன் மூலம் செல்லின் சக்தியும், ஆற்றலும் அதிகரிக்கிறது. உடலுறுப்பு சீரழிவு நோய்களான மூட்டுத் தேய்மானம், ஜவ்வு கிழிதல் போன்ற முதியவர்களுக்கு ஏற்படும் பிரச்னைகளை சரி செய்கிறார்கள். ஒவ்வொரு உறுப்பின் செயலாக்கத்தையும் ஓசோன் சிகிச்சை அதிகரிக்கிறது.

மூட்டு இணைப்புகள், தசைகள், சருமங்களில் ஊசி மூலம் செலுத்தியும், ரத்தத்தை வெளியே எடுத்து அதில் ஓசோன் மூலக்கூறுகளை ஏற்றி உடலில் செலுத்துகிறார்கள். மலக்குடல் வழியாகவும் உடலுக்குள் செலுத்தப்படுகிறது. முதியோர் நல சிகிச்சை தவிர, பல் சிகிச்சை, எய்ட்ஸ் நோய், புற்றுநோய் மற்றும் ரத்தச்சுழற்சி குறைபாடுகளுக்கும் இந்த ஓசோன் சிகிச்சையை பயன்படுத்துகிறார்கள்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post தோழி சாய்ஸ்!! (மகளிர் பக்கம்)
Next post தோழி சாய்ஸ்!! (மகளிர் பக்கம்)