ஐ.எஸ் அமைப்பின் புதிய தலைவர் அறிவிப்பு!! (உலக செய்தி)
இஸ்லாமிய அரசு என்று தங்களை கூறிகொள்ளும் ஜிகாதி குழுவான ஐ.எஸ் அமைப்பு தங்கள் அமைப்பின் புதிய தலைவராக அபு இப்ராஹிம் அல்-ஹாஷிமியை அறிவித்துள்ளது.
முந்தைய தலைவரான அல்-பாக்தாதியின் இறப்பை முதல்முறையாக அது உறுதி செய்துள்ளது.
அபு இப்ராஹிம் அல்-ஹாஷிமி புதிய தலைவராக இருப்பார் என்று தகவல் சேவை வழங்கும் டெலகிராம் மூலம் ஐ,எஸ் செய்தி வெளியிட்டுள்ளது.
கடந்த வார இறுதியில் அமெரிக்க சிறப்பு படைப்பிரிவுகள் சுற்றி வளைத்து நடத்திய தாக்குதலில் அல்-பாக்தாதி கொல்லப்பட்டார்.
5 ஆண்டுகளுக்கு முன்னால், ஐ.எஸ். அமைப்பு வளர்ச்சி அடைந்தபோது தொடங்கி, அமெரிக்க படைப்பிரிவுகளாலும், அதன் கூட்டணி படைகளாலும் தேடப்பட்டு வந்த இராக்கியரான பாக்தாதியின் தலைக்கு 25 மில்லியன் டொலர் பரிசுத் தொகை அறிவிக்கப்பட்டிருந்தது.
வடசிரியாவில் அமெரிக்க மற்றும் சிரியா குர்து ஆயுதப்படையினரால் பாக்தாதி கொல்லப்பட்டபோது, செய்தி தொடர்பாளர் அபு அல்-ஹாசன் அல்-முஹாஜீரும் கொல்லப்பட்டதை வியாழக்கிழமை ஐ.எஸ் அமைப்பு உறுதி செய்துள்ளது.
சௌதி அரேபியாவை சேர்ந்த இவர், அடுத்த தலைவராக வருவார் என்று எதிர்பார்க்கப்பட்டது.
Average Rating