தீ விபத்து – ஷாருக்கான் காப்பாற்றிய நபர் யார் தெரியுமா? (உலக செய்தி)

Read Time:2 Minute, 49 Second

இந்தி சினிமாவில் தீபாவளி பண்டிகைக்காக நட்சத்திரங்கள் விருந்து கொடுக்கும் வழக்கம் உள்ளது. ஒவ்வொரு ஆண்டும் ஒவ்வொரு நடிகர்கள் விருந்து கொடுப்பார்கள். அதில் மற்ற நடிகர்கள் அனைவரும் பங்கேற்பது வழக்கம். அந்த வகையில் இரண்டு ஆண்டுகள் கழித்து இந்த ஆண்டு தீபாவளியையொட்டி நடிகர் அமிதாப் பச்சன் தன்னுடைய இல்லத்தில் தீபாவளிக்காக விருந்து ஒன்றை ஏற்பாடு செய்தார்.

அந்த விருந்தில் இந்தி திரையுலகின் முன்னணி நட்சத்திரங்கள் அனைவரும் பங்கேற்றிருந்தனர். அந்த விருந்தில் ஐஸ்வர்யாராயிடம் பல ஆண்டுகளாக மானேஜராக பணியாற்றி வரும் அர்ச்சனா சதானந்த்தும் பங்கேற்றிருந்தார். இந்த விருந்துக்காக அமிதாப்பச்சனின் வீடு அழகான விளக்குகளால் கோலாகலமாக அலங்கரிக்கப்பட்டிருந்தது. தீபாவளி விருந்தில் பங்கேற்றிருந்த அர்ச்சனாவின் ஆடையில் திடீரென்று விளக்கில் இருந்து தீப்பற்றியது. இதனை பார்த்த அனைவரும் மிகவும் அதிர்ச்சி அடைந்தனர்.

அங்கிருந்த நடிகர் ஷாருக்கான் உடனே தான் அணிந்திருந்த லெதர் ஜாக்கெட்டை பயன்படுத்தி அர்ச்சனாவின் ஆடையில் இருந்த தீயை அணைத்தார். இந்த சம்பவத்தால் அர்ச்சனாவின் கை மற்றும் கால்களில் நெருப்புக் காயம் ஏற்பட்டது. தீ விபத்தில் இருந்து அர்ச்சனாவை காப்பாற்றிய நடிகர் ஷாருக்கானுக்கு சற்று காயம் ஏற்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.

பின்னர் அமிதாப்பச்சனின் வீட்டிலிருந்து அர்ச்சனாவை அருகில் இருந்த தனியார் மருத்துவமனையில் அனுமதித்தனர். தற்போது அவர் சிகிச்சை பெற்று வருகிறார். விரைவில் உடல் நலம் சரியாகி விடுவார் என்று மருத்துவர்கள் கூறியிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. தீ விபத்திலிருந்து அர்ச்சனாவை காப்பாற்றிய நடிகர் ஷாருக்கானுக்கு அவரது ரசிகர்கள் சமூக வலைத்தளத்தில் பாராட்டுக்களை தெரிவித்து வருகின்றனர்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post ஐ.எஸ் அமைப்பின் புதிய தலைவர் அறிவிப்பு!! (உலக செய்தி)
Next post காய்ச்சலும் கடந்து போகும்!!! (மருத்துவம்)