வாத நோய்களை குணப்படுத்தும் பிண்ணாக்கு கீரை!! (மருத்துவம்)
நாட்டு மருத்துவம் என்கிற நலம் தரும் மருத்துவத்தில் இன்றைக்கு நாம் காண இருக்கும் மூலிகை பிண்ணாக்கு கீரை. இது எங்கு பார்த்தாலும் குப்பையோடு குப்பையாக, அனைத்து இடங்களிலும் வளரக் கூடிய செடி வகை ஆகும். இதன் தண்டுகள் சிவப்பு நிறத்தில் காணப்படும். தரையோடு தரையாக வளரும் இயல்புடையது பிண்ணாக்கு கீரை. இந்த பிண்ணாக்கு கீரை உடலில் ஏற்படும் வாய்வு தொடர்பான தொல்லைகளை குணப்படுத்தக் கூடிய தன்மை உடையதாகும்.
பிண்ணாக்கு என்பதை மாட்டுக்கு பால் சுரப்பதற்கு உதவும் வகையில் தொடர்புடைய ஒரு சொல்லாக கூறப்படுகிறது. அதே போல் இந்த செடியும் மாடுகளுக்கு பால் சுரப்பதற்கு மட்டுமின்றி, மனிதர்களுக்கு ஏற்படக் கூடிய வாத, பித்த கோளாறுகளை நிவாரணம் செய்ய கூடியதாகும். இதனால் வாதம் என்று அழைக்கக் கூடிய பக்க வாதம் போன்றவற்றை நீக்க கூடியதாகும். அதே போல் வயிறு வீக்கம் என்று சொல்லக் கூடிய கோளாறையும் சரி செய்யக் கூடிய திறன் இந்த பிண்ணாக்கு கீரைக்கு உள்ளது.இதை நாம் பல்வேறு வடிவங்களில் நமது உணவில் கலந்து சாப்பிடலாம். இந்த கீரையை பயன்படுத்தி வாதம் சம்பந்தப்பட்ட நோய்களுக்கு தேவையான உணவை நாம் தயாரிக்கலாம்.
பிண்ணாக்கு கீரை, சுக்கு பொடி, கடுக்காய் பொடி, மிளகு பொடி ஆகியவற்றை கொண்டு நாம் இந்த உணவை தயார் செய்யலாம். ஒரு பிடி பிண்ணாக்கு கீரையை எடுத்துக் கொள்ள வேண்டும். 2 அல்லது 3 சிட்டிகை அளவுக்கு சுக்கு பொடியை சேர்க்க வேண்டும். ஒரு சிறிய அளவு கடுக்காய் பொடியும் சேர்க்கலாம். பிறகு கொஞ்சம் மிளகு பொடி சேர்க்கவும். சுவைக்காக தேவையான அளவு உப்பு. இந்த கலவையோடு நீர் விட்டு கொதிக்க வைக்க வேண்டும். நன்றாக கொதித்து இறக்கிய பிறகு இதை வடி கட்ட வேண்டும். இதை பருகுவதன் மூலம் வயிறு தொடர்பான கோளாறு மற்றும் வாத பித்த பிரச்னைகளை தடுக்கிறது.
அதே போல் இந்த கீரையை விளக்கெண்ணெய், ஆவார இலை பொடி, கடுக்காய் தோல் பொடி, நெல்லி வற்றல் பொடி ஆகியவற்றை ஒன்றாக சேர்த்து வதக்க வேண்டும். அவ்வாறு கிடைக்கும் பசையை மூட்டுகளில் வலியுள்ள இடத்தில் தடவுவதன் மூலம் வலியில் இருந்து நிவாரணம் பெறலாம்.ஒரு பிடி பிண்ணாக்கு கீரை, அரை ஸ்பூன் சீரகம், அரை ஸ்பூன் நெல்லி வற்றல் பொடி, நீரை விட்டு கொதிக்க வைத்து வடிகட்டி எடுத்து வைத்துக்கொள்ளவேண்டும். இதை தலையில் தடவினால் தலைவலி பறந்து விடும்.
மெலோசியா குர்கோரிபோரியா என்பது பிண்ணாக்கு கீரையின் தாவர பெயராகும். உடலில் விஷத்தை போக்கக் கூடியது. இதனால் பூச்சிகடிகளால் ஏற்படும் விஷத்தை போக்கும் தன்மையை கொண்டதாக இது விளங்குகிறது. வயிற்று வலி, சீத பேதி ஆகியவற்றை தடுக்கிறது. வயிற்று வீக்கத்தை கரைக்கிறது. வயிற்றில் உள்ள புண்ணை ஆற்றும் திறன் கொண்டதாக பிண்ணாக்கு கீரை விளங்குவதால் வயிற்றில் உருவாகும் புற்றுநோயை தடுக்கும் திறன் உடையதாக பிண்ணாக்கு கீரை விளங்குகிறது.
More Stories
மன இறுக்கம் குறைக்கும் கலை! (அவ்வப்போது கிளாமர்)
உனது ஆடையையும்எனது ஆடையையும்அருகருகே காய வைத்திருக்கிறாயேஇரண்டும்காய்வதை விட்டுவிட்டுவிளையாடிக் கொண்டிருப்பதைப் பார்! – தபூ சங்கர் கோபியும் சந்தியாவும் புதிதாகத் திருமணம் செய்து கொண்டவர்கள். பன்னாட்டு நிறுவனங்களில் பணிபுரிபவர்கள்....
நீ பாதி நான் பாதி!! (அவ்வப்போது கிளாமர்)
முடியாத தவம்என்னைக் குத்திக் கிளறும்வன்மம் மிகுந்த உன் அழகைஎப்படியடி பொறுத்துக் கொள்வேன்இரு கண்களையும்இறுக மூடி… – நா.வே.அருள் செந்தில்நாதன் பிசினஸ்மேன். அவருக்கு கல்லூரியில் படிக்கும் மகனும் மகளும்...
செக்ஸ் வேண்டாம்… செல்போனே போதும்!! (அவ்வப்போது கிளாமர்)
இன்று மொபைல் போன் மோகம் வயது வித்தியாசமில்லாமல் அனைவரையும் ஆட்டி வைக்கிறது என்பது நாம் அறிந்த ஒன்றுதான். ஒரு நிமிடம் கூட கையில் மொபைல் இல்லாமல் பெரும்பாலானோரால்...
பாலியல் உறவாலும் டெங்கு பரவும்?! (அவ்வப்போது கிளாமர்)
முறையற்ற பாலியல் உறவால் எய்ட்ஸ் போன்ற நோய்கள் பரவும் என்பதைக் கேள்விப்பட்டிருப்போம். தற்போது டெங்கு காய்ச்சலும் பரவும் என்பதை ஸ்பெயின் நாட்டு ஆய்வாளர்கள் உறுதிப்படுத்தியிருக்கிறார்கள். டெங்கு காய்ச்சலை...
போர்னோகிராபியை பற்றி பெண்கள் என்ன நினைக்கிறார்கள்?! (அவ்வப்போது கிளாமர்)
ஆண்கள் காட்சித்தூண்டுதலுக்கு ஆட்படுகிறவர்கள். அதனால்தான் ஒரு பெண்ணைப் பார்த்த உடனே காதலில் விழுகிறார்கள். ஆனால், பெண்கள் அப்படி காட்சித்தூண்டலுக்கு ஆட்படுகிறவர்கள் அல்ல. அதன் பின்னிருக்கும் காரண, காரியங்களை...
காதலிக்க நேரமில்லை!! (அவ்வப்போது கிளாமர்)
திருமணத்தின் மிக முக்கிய அம்சமான தாம்பத்ய உறவு என்ற ஒன்றே இல்லாமல் பெரும்பாலான தம்பதிகள் வாழ்ந்து வருவதாகக் கூறி கலவரப்படுத்துகிறது சமீபத்திய புதிய மருத்துவ ஆய்வறிக்கைகள். இதற்கு...
Average Rating