சேப்பங்கிழங்கு ரகசியம்!! (மருத்துவம்)

Read Time:4 Minute, 54 Second

*உணவே மருந்து

சேப்பங்கிழங்கை ருசித்திருப்போம்… அவ்வப்போது நம் வீட்டு சமையலிலும் சேர்த்து வருவோம். ஆனால், அதில் இருக்கும் மருத்துவ குணங்கள் பற்றி பலருக்கும் தெரியாது அல்லவா?! உணவியல் மருத்துவர் வினிதா கிருஷ்ணனிடம் சேப்பக்கிழங்கின் ரகசியத்தைக் கேட்போம்… வாருங்கள்

உருளைக்கிழங்கு, சர்க்கரை வள்ளிக்கிழங்கு, மரவள்ளி, சேனைக்கிழங்கு போன்றே சேப்பங்கிழங்கும் ஒரு வகையான கிழங்கு வகை. லேசான இனிப்பு சுவை இந்த கிழங்கில் இருப்பது சற்று அலாதியான விஷயம். இதனுடைய அறிவியல் பெயர் Colocasia esculenta என்பதாகும். தென்கிழக்கு ஆசியா மற்றும் இந்திய துணைக் கண்டத்தில் உள்ள நீர்த்தேக்கம் அதிகம் உள்ள இடங்களில் விளையக்கூடியது சேப்பக்கிழங்கு. கேரள மாநிலம் போன்ற நீர் நிலை பகுதிகளில் அதிகம் விளைந்திருப்பதைக் காண முடியும்.

சேப்பங்கிழங்கை மண்ணிலிருந்து எடுத்த உடன் சமைத்து சாப்பிடுவதால் அரிப்பு ஏற்படலாம், எனவே, சேப்பங்கிழங்கை நன்கு காய வைத்து அல்லது சில நாட்கள் கழித்து சமையலுக்குப் பயன்படுத்துவதால் அரிப்புத்தன்மையை தவிர்க்கலாம். சேப்பங்கிழங்கில் உள்ள அரிப்புத்தன்மையைப் போக்க எலுமிச்சைப்பழம், புளி ஆகியவை சேர்த்துப் பயன்படுத்தலாம். சேப்பங்கிழங்கை வேகவைத்தோ, வறுவலாகவோ, அவித்தோ அல்லது சிப்ஸாகவோ சமைத்து உண்ணலாம். சுவையாகவும் இருக்கும். சேப்பங்கிழங்கில் சராசரியாக 85% மாவுச்சத்து உள்ளது.

சேப்பங்கிழங்கு சாப்பிடுவது வயிற்றுப்பூச்சித் தொல்லையைப் போக்கும். கொலஸ்ட்ரால் பிரச்னைக்கும் ரத்த அழுத்தக் கோளாறுகளுக்கும் சேப்பங்கிழங்கை மருந்தாகப் பயன்படுத்தலாம். பூஞ்சைகள் மற்றும் பாக்டீரியாக்களுக்கு எதிராகப் போராடக் கூடியது. 100 கிராம் சேப்பங்கிழங்கில் 135 கிலோ கலோரிகள், புரதம் 11 கிராம் இருக்கிறது. மேலும் வைட்டமின் சி மற்றும் பி காம்ப்ளக்ஸும் அதிகம் உள்ளது. பொதுவாக சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் இந்த சேப்பங்கிழங்கினை உணவாக எடுத்துக் கொள்ளலாம். அரிப்பு, அலர்ஜி போன்ற உபாதைகள் குழந்தைகளுக்கு ஏற்படும் என்பதால் 2 வயதுக்குப் பிறகு சாப்பிட கொடுக்கலாம். பூஞ்சைகள் மற்றும் பாக்டீரியாக்களுக்கு எதிராகப் போராடக்கூடிய வல்லமை சேப்பங்கிழங்குக்கு உண்டு.

இலையும் ஸ்பெஷல்தான்!

சேப்பங்கிழங்கு இலையிலும் மருத்துவ குணம் அதிகம். வட மாநிலங்கள் மற்றும் கேரளாவில் தேங்காய்ப்பாலில் சேப்பங்கிழங்கு இலையைச் சேர்த்து வேக வைத்து சூப்பாக பருகுவார்கள். உத்தரகாண்ட் போன்ற வட மாநிலங்களில் இலையை பக்கோடா செய்தும் சாப்பிடுவர். சேப்பங்கிழங்கு இலையில் நீரிழிவு நோயை அழிக்கும் ஆற்றல் அதிகம் இருக்கிறது. அதனால் நீரிழிவு நோயாளிகளுக்கும் இது சிறந்த மருந்து. சேப்பங்கிழங்கு இலையை சாப்பிடுவதால் புரதம், இரும்புச்சத்து, துத்தநாகம், தாமிரம், மக்னீசியம் போன்ற நுண் ஊட்டச்சத்துகள் கிடைக்கிறது.

பாம்புக்கடி, தேள் கடி மற்றும் உணவு நச்சுத்தன்மை அடைதல் ஆகிய விஷத்தன்மையை முறிக்கும் தன்மையும் உள்ளது. மேலும் வலி நீக்கும் நிவாரணியாகவும், ரத்தக்கசிவு(Haemorrhage) ஏற்படாமல் இருக்கவும் இதை பயன்படுத்தலாம். சேப்பங்கிழங்கு இலையில் பி வைட்டமின் இருப்பதால் நரம்புத்தளர்ச்சி உள்ளவர்களும் பயன்படுத்தலாம்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post ஓரின சேர்க்கையில் தான் அதிக இன்பம் என்பது சரிதானா? (அவ்வப்போது கிளாமர்)
Next post தமிழ்த் தேசியக் கட்சிகள் ‘மீண்டும்’ ஒன்றிணைய வேண்டும் !! (கட்டுரை)