மணி காட்டும் தமிழ்நாட்டின் பாரம்பரியம்!! (மகளிர் பக்கம்)

Read Time:11 Minute, 15 Second

‘‘எனக்கு வடிவமைக்க தெரியாது. ஆனால் ஒரு பொருளை வடிவமைப்பதற்கு என்ன தேவை? வாடிக்கையாளர்களின் விருப்பம் என்ன? வடிவமைக்கப்பட்ட பொருட்களை எவ்வாறு மார்க்கெட்டிங் செய்யணும்ன்னு தெரியும்’’ என்கிறார் ரேவதி கான்ட்.இவர் பிரபல வாட்ச் நிறுவனமான டைட்டன் நிறுவனத்தின் தலைமை வடிவமைப்பு அதிகாரியாக கடந்த 28 வருடமாக பணியாற்றி வருகிறார். தற்போது இவரின் தலைமையின் கீழ் டைட்டன் நிறுவனம் தமிழ்நாட்டு மக்களுக்காகவே பாரம்பரியம் மனத்துடன் புதிய வாட்ச் டிசைன்களை அறிமுகம் செய்துள்ளது. வடிவமைப்பு துறைக்கும் இவருக்கும் உள்ள நெருக்கம் பற்றி விவரிக்கிறார் ரேவதி கான்ட்.

‘‘என்னுடைய சொந்த ஊர் தஞ்சாவூர். பிறந்தது அங்கு தான் என்றாலும் நான் பல இடங்களில் என்னுடைய பள்ளி மற்றும் கல்லூரி நாட்களை கடந்திருக்கிறேன். அப்பாவின் வேலைக் காரணமாக நாங்க நாக்பூருக்கு செல்ல வேண்டி இருந்தது. அங்கு தான் என்னுடைய 12 வருஷ பள்ளிக் காலம் கடந்தது. அதன் பிறகு ஊட்டியில் சில வருடம். பிறகு திருச்சியில் உள்ள கல்லூரி ஒன்றில் முதுகலைப் பட்டப் படிப்பு படிச்சேன். கல்லூரியில் படிக்கும் போது இன்டர்ஷிப் செய்வதற்காக நான் டைட்டன் நிறுவனத்திற்கு சென்றேன்.

அதன் பிறகு அவர்களே எனக்கு வேலை வாய்ப்பும் கொடுத்தனர். அன்று முதல் இன்று வரை நான் என்னுடைய நிறுவனத்தில் பல முக்கிய பொறுப்புகளை வகித்து வருகிறேன்’’ என்றவர் பெங்களூரில் உள்ள டைட்டன் நிறுவனத்தில் மார்க்கெட் மற்றும் ஆய்வுத் துறையில் தான் முதலில் வேலைக்கு சேர்ந்துள்ளார். ‘‘அங்கு இன்டர்ன்ஷிப் செய்யும் போதே, எனக்கு வேலை வாய்ப்புகள் வந்தது. நானும் கல்லூரிப் படிப்பை முடித்துவிட்டு அங்கு வேலைக்கு சேர்ந்தேன். மார்க்கெட்டிங் மற்றும் ரிசர்ச் துறையில் வேலைக்கு சேர்ந்தேன். நான்கு வருஷம் இங்கிருந்தேன். அதன் பிறகு துபாயில் உள்ள மார்க்கெட்டிங் துறையினை தலைமை வகிக்க சென்றேன்.

அங்கு பத்து வருஷம். 2005ம் ஆண்டு மீண்டும் சென்னைக்கு வந்த போது, டைட்டன் வாட்சின் வடிவமைப்பு துறையினை தலைமை தாங்கும் பொறுப்பு எனக்கு கிடைத்தது. மேலும் இவ்வளவு காலம் மார்க்கெட்டிங் துறையில் இருந்தாச்சு. வேறு வித்தியாசமா ஏதாவது செய்யணும்ன்னு தோணுச்சு. அதனால் கிடைத்த வாய்ப்பினை ஏற்றுக் கொண்டேன்.

ஏற்கனவே சொன்னது போல், நான் வடிவமைப்பாளர் கிடையாது. எனக்கு டிசைன்களை வடிவமைக்கவும் தெரியாது. ஆனால் எனக்கு கீழ் இருக்கும் வடிவமைக்கும் குழுவினை நான் நிர்வகிக்கணும். அதற்கு நான் முதலில் வடிவமைக்கும் துறையைப் பற்றித் தெரிந்து கொள்ளணும். அந்த துறையை பற்றி முழுமையாக தெரிந்துக் கொள்ள எனக்கு இரண்டு வருடமானது.

வாட்ச் மட்டும் இல்லை எந்த பொருளையும் அதனை வடிவமைக்கும் திறன் மூலம் பெரிய அளவில் கொண்டு வரமுடியும்ன்னு புரிந்தது. அதன் பிறகு எனக்கு வாட்ச் பிரிவில் இருந்து நகையினை வடிவமைக்கும் குழுவிற்கு தலைமை ஏற்றுக் கொள்ளும் வாய்ப்பு வந்தது.

வாட்சை வடிவமைப்பதை காட்டிலும் ஒரு நகையினை வடிவமைப்பது என்பது மிகவும் சுவாரஸ்யமானது. வாட்சை விட நகை வடிவமைப்பதில் பல நுணுக்கங்கள் அடங்கியுள்ளது. அதை கொண்டு பெண்களின் விருப்பத்திற்கு ஏற்ப பல அற்புத டிசைன்களை என் குழுவுடன் இணைந்து செயல்பட்ேடன்.

இரண்டு வருடத்திற்கு முன் டிசைன் துறையினை நிறுவனம் விரிவுபடுத்த நினைச்சது. அதன் மூலம் டிசைன் எக்செலன்ஸ் மையத்தை துவங்கியது. இந்த மையத்தில் அனைத்து வடிவமைப்பாளர்களும் ஒன்றிணைக்கப்பட்டனர். அதாவது வாட்ச் மட்டும் இல்லாமல், டைட்டன் நிறுவனத்தின் எல்லா துறையை சார்ந்த 75 வடிவமைப்பாளர்களும் ஒன்றாக இணைக்கப்பட்டு அனைத்து பொருட்களும் ஒரே கூரையின் கீழ் வடிவமைக்கப்பட்டது’’ என்றவர் தலைமை பொறுப்பை எவ்வாறு கையாள வேண்டும் என்றும் விவரித்தார்.

‘‘வடிவமைப்பு என்பது பார்க்க அழகாக மட்டும் இருப்பதில்லை. வாடிக்கையாளர்களின் தேவையை பூர்த்தி செய்வதும் கூட. அதற்கு டிசைனிங் திங்கிங் இருக்கணும். டிசைனிங் திங்கிங்… ஒரு பொருளை வடிவமைப்பது முதல் அதை வாடிக்கையாளர்களிடம் கொண்டு போய் சேர்ப்பது வரை. முதலில் வாடிக்கையாளர்களின் தேவை என்ன என்று புரிந்து கொள்ளணும்.

அவர்களின் தேவைகளைப் பூர்த்தி செய்வது தான் ஒரு வடிவமைப்பாளரின் எண்ணமாக இருக்க வேண்டும். ஏதோ ஒரு நகையை வடிவமைச்சோம், எல்லாரும் வாங்குவாங்கன்னு சொல்ல முடியாது.

ஒரு பொருளை உருவாக்கும் முன் வாடிக்கையாளர்களின் விருப்பம், லேட்டெஸ்ட் டிரண்ட், விலை எல்லாவற்றையம் புரிந்து கொண்டால் தான் கலை நயத்தோடு செயல்படுத்த முடியும். அதை நாங்க புரிந்து கொண்டதால் தான் எங்களால் இது போன்ற புதிய டிசைன்களை உருவாக்க முடிந்தது’’ என்றவர் தற்போது தமிழ்நாட்டிற்காக பிரத்யேகமாக வடிவமைக்கப்பட்ட வாட்சுகளை பற்றி விவரித்தார்.

‘‘தமிழ்நாட்டை பொறுத்தவரை இங்க நிறைய உணர்வுகள் இருக்கு. அந்த உணர்வுகள்நம்முடைய பாரம்பரியத்தின் அடையாளமாக என்றும் இருக்க வேண்டும்ன்னு நினைத்தோம். அதன்படி உருவானது தான் இந்த மூன்று வாட்ச்கள். நம்முடைய பாரம்பரியம் என்று சொன்னால் அதன் பட்டியல் பெரியது,நீண்டு கொண்டே போகும். அதில் நம் மனதில் முதலில் வருவது காஞ்சிபுரம் பட்டு, கோயில் வாசலில் நிற்கும் யாழி மற்றும் தமிழ் எழுத்துக்கள். இந்த மூன்றையும் கொண்டு வாட்சினை அறிமுகம் செய்ய நினைச்சோம்.

முதலில் காஞ்சிபுரம் பட்டுத் துணியில் சின்னதாக அன்னப்பட்சி பறவையின் உருவத்தை எம்பிராய்டரி செய்யலாம் என்ற எண்ணம் தோன்றியது. அதன்படி எங்களின் வடிவமைப்பாளர்கள் உருவாக்கிக் கொடுத்தாங்க. அடுத்ததாக யாழின் உருவத்தை 3டி முறையில் எம்போஸ் செய்து இருக்கோம். கடைசியாக தமிழ் எழுத்துக்களில் எண்களை வடிவமைத்திக்கிறோம்.

எல்லாவற்றிலும் ரொம்ப நுணுக்கமா வேலைப் பார்த்து இருக்கிறோம். காரணம் வாட்சின் டயலில் தான் நாம் பல விதமான டிசைன் செய்ய முடியும். காகிதத்தில் வரையப்படும் வடிவங்கள் அப்படியே கொண்டு வரவேண்டும். அதே சமயம் வாட்சும் சரியான நேரத்தை சுட்டிக் காட்டவேண்டும். இப்படி சின்ன சின்ன நுணுக்கங்கள் மற்றும் மாற்றங்கள் கொண்டு தான் இந்த வாட்சுகள் வடிவமைக்கப்பட்டுள்ளன’’ என்றவர் ஒரு தலைவியாக பொறுப்பை ஏற்கும் போது அந்த பொறுப்பினை கையாளும் திறமையும் உடன் வளர்த்துக் கொண்டுள்ளார்.

‘‘நிறைய கத்துக்கிட்டேன். இன்றும் கத்துக் கொண்டு இருக்கிறேன். மேலும் வடிவமைப்பாளர்கள் கொஞ்சம் உணர்ச்சிப்பூர்வமாக இருப்பாங்க. அதே சமயம் நாம் சொல்லும் விஷயத்திற்கு அவர்கள் மதிப்பு தரவேண்டும் என்றால் நமக்கு அது பற்றி அறிவு இருக்கணும்.

அப்போது தான் அவர்கள் நம்மை மதிப்பார்கள். மேலும் நாம் அவர்களுக்காக எப்போது குரல் கொடுப்போம் என்ற நம்பிக்கையை ஏற்படுத்தணும். சின்ன தவறு நடந்தாலும் அதற்கான பொறுப்பை நாம் ஏற்றுக் கொண்டு தீர்வு காணவேண்டும்.

இப்படி பல நேரங்களில், அவர்களுக்கு நான் என்னையே புரிய வைத்தேன். இப்போது என்னுடைய வடிவமைப்பாளர் குழு தான் பெஸ்ட்டுன்னு என்னால் பொறுமையா சொல்ல முடியும்’’ என்றவர் மேலும் பல டிசைன்களை உருவாக்கும் எண்ணம் இருப்பதாக தெரிவித்தார். ‘‘நிறுவனத்திற்காக பல டிசைன்களை சக்சஸ்ஃபுல்லாக வடிவமைச்சிருக்கிறோம். தற்போது தமிழ்நாட்டிற்காக அறிமுகம் செய்து இருக்கிறோம். இதே போல் தேசிய அளவில் பல டிசைன்களை உருவாக்க வேண்டும்’’ என்றார் ரேவதி கான்ட்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post சேர்பியாவின் வெளிவிவகார பாதுகாப்புக் கட்டமைப்பு !! (கட்டுரை)
Next post வயிற்றுப் புண்களை ஆற்றும் ‘கருப்பு கசகசா’!! (மருத்துவம்)