கூந்தலை காக்க…!! (மகளிர் பக்கம்)
பெண்களின் அழகுக்கு கூந்தல்தான் மூலதனம். நல்ல கூந்தல் நல்ல ஆரோக்கியத்துக்கு எடுத்துக்காட்டு.கவனக்குறைவு, கூந்தலை சரியாக பராமரிக்காமை, செம்பட்டை, முடி உதிர்தல் போன்றவையால் கூந்தல் வறட்சித்தன்மையை அடைந்துவிடும். இதனைப் போக்க இதோ சில எளிய முறைகள்….
* வாரம் இருமுறை தேங்காய்ப்பாலை தலையில் தேய்த்து, பிறகு அலசினால் வறட்சி நீங்கி கூந்தல்
கருகருவென வளரும். செம்பட்டையும் அகலும்.
* ஆலிவ் எண்ணெய், மீன் எண்ணெயைச் சாப்பிடும் பெண்களுக்கு, செம்பட்டை ஏற்படாது.
* அதிமதுரப் பொடியை எருமைப்பாலில் குழைத்து, வெண்ணெய் நிலைக்கு வந்ததும், தலையில் தேய்த்து குளித்தால், தலைமுடி உதிராது.
* துளசி இலையை அரைத்து, தலையில் தேய்த்து 15 நிமிடம் வைத்திருந்து குளித்தால் பேன் தொல்லை விலகும்.
* நல்லெண்ணெய், வேப்பம்பூ, வெல்லம் ஆகியவற்றை சேர்த்து காய்ச்சி வடிகட்டி, தலைக்குத் தேய்த்து குளித்தால் பொடுகு நீங்கும்.
* சிலருக்கு பித்த நரை ஏற்படும். இதற்கு கறிவேப்பிலை, பச்சைக்கொத்தமல்லி, இஞ்சி மற்றும் எலுமிச்சை ஆகியவற்றை உணவில் அதிகம் சேர்த்துக்கொள்ளலாம்.
* மல்லிகைப்பூவை நல்லெண்ணெயில் போட்டு காய்ச்சி குளித்து வந்தால், கண் எரிச்சல் நீங்கி உடல் உஷ்ணமும் குறையும்.
Average Rating