நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் பீட்ரூட்!! (மருத்துவம்)

Read Time:1 Minute, 42 Second

நாம் அடிக்கடி உணவில் பயன்படுத்தும் பீட்ரூட்டில் ஏராளமான மருத்துவ குணங்கள் இருக்கின்றன.

* தீக்காயம் பட்ட இடத்தில் பீட்ரூட் சாறு எடுத்து தடவி வந்தால் தீப்புண் கொப்பளம் ஆகாமல் விரைவில் ஆறும்.

* பீட்ரூட் சாறுடன் வெள்ளரி சாறு கலந்து சாப்பிட சிறுநீரகக் கோளாறுகள் நீங்கும், பித்தப்பை சுத்தமாகும். சிவப்பணு குறைபாடு நீங்கும்

* பீட்ரூட்டை தோல் சீவி விட்டு பச்சையாக எலுமிச்சம்பழ சாறில் நனைத்து சாப்பிட உடம்பில் சிவப்பணுக்கள் உற்பத்தி பெருகும்.

* பீட்ரூட் சாறு எடுத்து குடித்தால் அஜீரணம் நீங்கி செரிமானம் ஏற்படும்.

* பீட்ரூட் சாறு எடுத்து தேனுடன் கலந்து சாப்பிட்டுவர குடல் புண்கள் குணமாகும்.

* பீட்ரூட்டில் நிறைய ஊட்டச்சத்துக்கள் உள்ளன. அடிக்கடி பீட்ரூட் சாப்பிட்டு வந்தால் இதயம் பலம் பெறும். ரத்த விருத்தி அதிகரிக்கும். உடலில் ரத்தம் அதிகமாகி உடல் வனப்பு கூடும். இதை பச்சையாகவோ சமைத்தோ சாப்பிடலாம்.

* பீட்ரூட் பொரியலில் மிளகாய் தூளுக்குப் பதிலாக மிளகுத்தூளை கலந்து சாப்பிட்டால் உடம்பில் எதிர்ப்பு சக்தி பெருகும்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post Festival makeup!! (மகளிர் பக்கம்)
Next post பரிசுகளில் இது புதுசு…!! (மகளிர் பக்கம்)