கொரோனா வைரஸ் பரவல் – முஸ்லிம்களை பொறுப்பாக்க முடியாது!! (உலக செய்தி)

Read Time:2 Minute, 8 Second

கொரோனா வைரஸ் பரவலுக்கு ஒட்டுமொத்த முஸ்லிம்களை பொறுப்பாக்க முடியாது என மத்திய சிறுபான்மையினர் நலத் துறை அமைச்சர் முக்தர் அப்பாஸ் நக்வி தெரிவித்ததாக இந்து தமிழ் திசை செய்தி வெளியிட்டுள்ளது.

அவர் டெல்லியில் பிடிஐ செய்தி நிறுவனத்திற்கு அளித்த பேட்டியில், “டெல்லியில் நடந்த தப்லீக் ஜமாத் மாநாட்டில் கலந்து கொண்ட முஸ்லிம்களால் நாட்டில் கொரோனா வைரஸ் தொற்று அதிகம் பரவியதாக குற்றம்சாட்டப்படுகிறது. ஒரு குறிப்பிட்ட குழுவினரின் இந்த நடவடிக்கையை முஸ்லிம் சமூகத்தின் பெரும்பாலானவர்கள் கண்டித்துள்ளனர். எனவே, கொரோனா வைரஸ் பரவலுக்காக ஒட்டுமொத்தமாக முஸ்லிம்களை பொறுப்பாக்க முடியாது” என்றார்

மேலும், புனித ரம்ஜான் மாதத்தில் முஸ்லிம்கள் ஊரடங்கு விதிமுறை களை கடைபிடிப்பார்கள் என்ற நம்பிக்கை உள்ளது. ரம்ஜான் மாதத்தில் மசூதிகளில் இப்தார் விருந்து கள், சிறப்பு தொழுகைகள் நடத்துவதில்லை என்று நாடு முழுவதும் உள்ள இமாம்கள் உலமாக்கள், முஸ்லிம் அமைப்புகள் முடிவு செய்துள்ளன.

ஊரடங்கு விதிகளின்படி சமூக இடைவெளியைப் பின்பற்றி வீட்டிலேயே இவற்றை நடத்த முஸ்லிம்கள் ஒருமனதாக முடிவு செய்துள்ளனர். மாநில வக்பு வாரியங்களின் நிர்வாகிகள், சமூக, மதத் தலைவர்கள் சமூக இடை வெளி குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றனர் இவ்வாறு அவர் கூறினார்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post காவலர்களை கதறவிட்ட 10 கடத்தல்காரர்கள்! (வீடியோ)
Next post கொரோனா வைரஸ் சிகிச்சைக்கு மருந்து எப்போது கிடைக்கும்? (உலக செய்தி)