‘ச்ச்ச்சீ..ப் போங்க!’! (அவ்வப்போது கிளாமர்)
மனித வாழ்க்கையில் தவிர்க்கமுடியாத, தவிர்க்கக் கூடா த விஷயம் செக்ஸ். ஆகவே, அதைப்பற்றி உலகம் முழுவதும் இடை வெளி விடாமல் ஆய்வு செய்கிறார்கள். புதிது, புதிதாய் கண்டு பிடித்து வெளி யிடுவதற்கென்றே, ‘ஜர்னல் ஆப் செக்ஸ் ரிசர்ச்’ வெளியீடு வந்து கொண்டிருக்கிறது. உறவு நேரத்தில் ஜோடிகள் என்னென்ன செய்வார்கள் என கூடுதலாய் பல ‘அந்தரங்க’ மேட்டர்கள் பற்றி விசாரித்து லேட்டஸ்ட் இதழில் போட்டிருக்கிறார்கள்.
‘விஷயம்’ துவக்கும் முன், சலிக்கிற (சலிக்குமா!?) வரை முத்தம் கொடுப்பவர்கள் ஆண்களாம். அப்போது வெட்கப்பட்டு ‘ச்ச்ச்சீ..ப் போங்க!’ என ஒதுங்குகிற பெண்கள்.. எல்லாம் முடிந்து, ஆண்கள் சோர்ந்து படுத்து விட்ட நேரத்தில் முத்த ஆயுதத்தால் சரமாரியாக தாக்குகின்றனர். உறவு முடிந்த பிறகு, ஆண்களை கட்டிக் கொண்டு தூங்கவே பெரும்பாலான பெண்கள் விரும்புகிறார்கள். சைலன்ட் பேச்சு, முத்தம், வாஞ்சையாய் தடவிக் கொடுத்தல் ஆகியவையும் இந்த நேரத்தில் நடக்கிறதாம்.
ஆண்களுக்கு அதை விட முக்கியமான வேலை இருக்கிறது. ‘விஷயம்’ முடிந்ததும் நிறைய பேர் சிகரெட் பத்த வைக்கிறார்களாம். இன்னும் சிலர் தண்ணீர் குடிப்பது, சாப் பிடுவது அல்லது கம்மென்று படுத்துத் தூங்குவது என்று சுருண்டு விடுகிறார்களாம்.
Average Rating