சிறுவயதில் பாலியல் கொடுமை – பகீர் தகவல்! (சினிமா செய்தி)

Read Time:1 Minute, 39 Second

திரைப்படங்களில் அம்மா வேடங்களில் நடித்து பிரபலமானவர் லட்சுமி ராமகிருஷ்ணன். சில படங்களை டைரக்டும் செய்துள்ளார். தொலைக்காட்சி நிகழ்ச்சிகளையும் தொகுத்து வழங்கி இருக்கிறார். சிறு வயதில் தனக்கு நேர்ந்த பாலியல் கொடுமை அனுபவம் பற்றி அவர் கூறியதாவது: “எனக்கு சிறு வயதில் நடந்த ஒரு அனுபவத்தை இப்போது நினைக்கும்போதும் மனது வலிக்கிறது. அப்பா வயதில் இருக்கும் ஒருவர் என் முன்னால் அந்தரங்கத்தை காட்டியபடி நின்றார். ஆரம்பத்தில் அது எனக்கு புரியவில்லை.

வளர வளர புரிய ஆரம்பித்ததும் எவ்வளவு கேவலமான செயல் என்று மனதில் ரணம் ஏற்பட்டது. பெண் குழந்தைகளுக்கு என்ன பாதுகாப்பு இருக்கிறது என்று நினைத்து பாருங்கள். அதே மாதிரி எனது மகள் பள்ளியில் இருந்து வரும்போது லிப்டில் ஒருவன் ஆபாசமாக நின்றுள்ளான். சி.சி.டி.வி. கேமராவில் தேடியும் அவனை கண்டுபிடிக்க முடியவில்லை. எனது நெருங்கிய நண்பர்கள் குடும்பத்திலும் ஒரு பெண்ணுக்கு மோசமான தொடுதல் நடந்துள்ளது. இப்படி பல பெண்களுக்கு கொடுமைகள் நடக்கிறது”. இவ்வாறு லட்சுமி ராமகிருஷ்ணன் கூறியுள்ளார்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post 5 நாட்களில் 3½ லட்சம் பேர் வௌியேற்றம் – 69 கோடி வசூல்!! (உலக செய்தி)
Next post ’வெட்கமின்றி பதவிகள் கேட்டால் அமைச்சுப் பதவியை வாங்கித் தருகிறேன்’ (கட்டுரை)