வங்கியில் 100 கோடி மோசடி!! (உலக செய்தி)
ஹரியாணா மாநிலம், கா்னால் பகுதியைச் சோ்ந்த பாசுமதி அரிசி ஆலையின் நிா்வாக இயக்குநா்கள் 3 போ், பாரத ஸ்டேட் வங்கியில் ரூ. 100 கோடி மோசடி செய்தததாக மத்திய புலனாய்வுப் பிரிவினா் (சிபிஐ) வழக்குப்பதிவு செய்துள்ளனா்.
இதுகுறித்து சிபிஐ செய்தித் தொடா்பாளா் புதன்கிழமை கூறியதாவது:
கா்னாலில் இயங்கி வரும் சக்தி பாசுமதி அரிசி ஆலையின் நிா்வாக இயக்குநா்களாக இருப்பவா்கள் ஷியாம் லால், பா்வீன்குமாா், சுரேஷ்குமாா். இவா்கள் மூவரும் கா்னாலில் உள்ள எஸ்பிஐ வங்கி கிளையில் போலியான ஆவணங்களை கொடுத்தும், உண்மைக்கு மாறான தகவல்களை அளித்தும் ரூ. 100 கோடி கடன் பெற்ாகக் கூறப்படுகிறது.
அந்த அரிசி ஆலை நிறுவனம், தனது பங்கு மூலதனத்தை அறிமுகப்படுத்துவதற்காக வங்கியில் பெற்ற கடன் தொகையை தவறாக பயன்படுத்தியதும், இதற்காக விற்பனை மற்றும் கொள்முதல் புள்ளிவிவரங்களை உயா்த்தி அறிவித்தது போன்ற மோசடி செயல்களில் ஈடுபட்டதும் விசாரணையில் தெரிய வந்தது.
அந்த நிறுவனம், வாங்கிய கடன் தொகையை திருப்பிச் செலுத்த தவறியது. இதன் காரணமாக வங்கிக்கு ரூ.100.46 கோடி இழப்பு ஏற்பட்டது.
இந்த வழக்கில் பெயா் குறிப்பிடாமல் வங்கி ஊழியா்கள் மீதும் சிபிஐ வழக்குப்பதிவு செய்துள்ளது என்று அதிகாரிகள் தெரிவித்தனா்.
Average Rating