கொரோனாவுக்கான தடுப்பூசியை மனிதர்களிடம் பயன்படுத்தி பரிசோதனை!! (உலக செய்தி)
Read Time:1 Minute, 1 Second
கொரோனா வைரஸூக்கு தடுப்பூசி கண்டறியும் முயற்சியில் பல்வேறு நாடுகள் ஈடுபட்டுள்ளன. இந்நிலையில், அமெரிக்காவை சேர்ந்த உயிரி தொழில்நுட்ப நிறுவனமான ‘நோவாவேக்ஸ்’, தடுப்பூசியை கண்டறிந்ததாக தெரிவித்துள்ளது.
அந்த தடுப்பூசியை அவுஸ்திரேலியாவில் மனிதர்களிடம் பயன்படுத்தி பரிசோதித்து வருவதாக நேற்று அறிவித்தது. மெல்போர்ன், பிரிஸ்பேன் ஆகிய நகரங்களில் முதல்கட்ட பரிசோதனை தொடங்கி உள்ளது.
இதன்மூலம், இந்த ஆண்டுக்குள் தடுப்பூசியை பயன்பாட்டுக்கு கொண்டுவர முடியும் என்று அந்த நிறுவனத்தின் ஆராய்ச்சி பிரிவு தலைவர் கிரிகோரி கிளன் தெரிவித்தார்.
Average Rating