4 மாவட்டங்களுக்கு மின்சார கட்டணம் செலுத்த கால அவகாசம் !! (உலக செய்தி)

Read Time:3 Minute, 12 Second

தமிழ்நாடு மின்சார வாரியம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டு இருப்பதாவது:-

ஊரடங்கு காரணமாக கடந்த மார்ச் 25 ஆம் திகதி முதல் வருகிற ஜூலை 5 ஆம் திகதி வரை மின் கட்டணம் செலுத்த கடைசி திகதி உள்ள சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் மற்றும் செங்கல்பட்டு ஆகிய மாவட்ட தாழ்வழுத்த நுகர்வோர்கள் தங்களது மின் இணைப்பிற்கான மின்கட்டணத்தை வருகிற ஜூலை 6 ஆம் திகதி வரை தாமத கட்டணம் மற்றும் மறு மின் இணைப்பு கட்டணமின்றி செலுத்தலாம்.

தமிழகத்தில் சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் மற்றும் செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களை தவிர்த்து மற்ற மாவட்டங்களில் உள்ள தாழ்வழுத்த நுகர்வோர்களின் மின்கட்டணம் செலுத்தும் கடைசி திகதி கடந்த மார்ச் 25 ஆம் திகதி முதல் வருகிற 14 ஆம் திகதி வரை இருப்பின், அவர்கள் வருகிற 15 ஆம் திகதி வரை தாமத கட்டணம் மற்றும் மறு மின்இணைப்பு கட்டணமின்றி செலுத்தலாம்.

தமிழகத்தில் சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் மற்றும் செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களை தவிர்த்து மற்ற மாவட்டங்களில் உள்ள தாழ்வழுத்த நுகர்வோர்களின் மின்கட்டணம் செலுத்த கடைசி தேதி வருகிற 15 ஆம் திகதியாகும். அன்று மற்றும் அதற்கு பிறகோ இருப்பின் அவர்கள் தங்களுக்குரிய கடைசி தேதிக்குள் செலுத்த வேண்டும். அவர்களுக்கு மின்கட்டணம் செலுத்த கால நீட்டிப்பு வழங்கப்பட மாட்டாது.

தமிழகத்தில் உள்ள அனைத்து உயர் அழத்த நுகர்வோர்களை பொருத்தவரை தமிழ்நாடு மின்சார வாரியம் தனது மின் துண்டிப்பிற்கான உரிமையை விட்டு கொடுத்ததினால் கடந்த பெப்ரவரி, மார்ச், ஏப்ரல் மாதத்திற்கான மின்கட்டணத்தை முறையே மார்ச், ஏப்ரல் மற்றும் மே மாதங்களில் செலுத்தாமல் இருந்தால், அந்த உயர் மின்னழுத்த நுகர்வோர்கள் தங்களது கட்டணத்தை வருகிற 15 ஆம் திகதிக்குள் செலுத்தலாம். அவர்களுக்கு மின் துண்டிப்பு மற்றும் மறு இணைப்பு கட்டணம் வசூலிக்கப்படமாட்டாது. மே மாத உயர் மின்னழுத்த மின் கட்டணத்தை நுகர்வோர்கள் அந்த மாதத்திற்கான குறிப்பிட்ட கெடு திகதிக்குள் செலுத்த வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post உலக அளவில் கொரோனா பாதித்த 385,991 பேர் பலி !! (உலக செய்தி)
Next post அழகான கூடு!! (மகளிர் பக்கம்)