அழகான கூடு!! (மகளிர் பக்கம்)

Read Time:13 Minute, 1 Second

சிலருக்கு அழகான வீடு இருக்கும். போதிய பொருட்களும் இருக்கும். ஆனால் பராமரிப்பதிேலா, சரியானபடி அமைப்பதிலோ, ஆசை அவ்வளவாக இருக்காது அல்லது அதைப் பற்றியான எண்ணம் இல்லாமல் இருக்கலாம். அதே சமயம் சிலருக்கு வசதி வாய்ப்புகள் அவ்வளவாக இருக்காது. ஆனால் எதிலும் ஒரு ஆர்வம் இருக்கும். ரசிப்புத் தன்மை காணப்படும். புதிய பொருட்களை பார்க்கும்பொழுது, இதை நாமும் வாங்கலாமா, எப்படி அமைக்கலாம் என்றெல்லாம் யோசிக்க ஆரம்பிப்பார்கள். அப்படிப்பட்டவர்களின் ஆசையை பூர்த்தி செய்யும் விதத்தில் சின்னச் சின்ன ஐடியாக்கள்.
அகத்தின் அழகு முகத்தில் தெரியும் என்பார்கள். அது போல் வீட்டின் உள் அமைப்பு, வாசல் பக்கம் பார்த்தாலே தெரிந்து விடும். பல நாட்கள் சுத்தம் செய்யப்படாத வாசற்புறம் புழுதி குப்பையுடன் காணப்படுவதை பார்த்தாலே வீடு எப்படி இருக்கும் என நமக்கு ஓரளவு சூழ்நிலை புரிந்து விடும்.

அத்தகைய சூழல் இல்லாமல் எடுத்த எடுப்பிலே நாம் ஒரு வெல்கம் டச் தருவது ேபான்று வீட்டை அமைக்கலாமே! அதுவே நம் வீட்டிற்கு முதல் மரியாதையை வாங்கித் தந்துவிடும். வீடு என்பது நினைத்த பொழுதெல்லாம் மாற்றமுடிவதோ, கட்டப்படுவதோ கிடையாது. அப்படியிருக்கும்பொழுது வாசற்கதவை மட்டுமாவது உயிரோட்டம் தருவது போன்று செதுக்கப்பட்ட கதவினை அமைக்கலாம் (வுட் கார்விங்). இயற்கைக் காட்சிகள், நம் பாரம்பரியம், கலாச்சாரம், பழமைச் சின்னங்கள் போன்றவற்றை மரத்திலேயே செதுக்கித் தருவார்கள். சதுர அடி கணக்கிட்டு வேண்டிய டிசைனைப் பொறுத்து விலை நிர்ணயம் செய்யப்படுகிறது. சிறிய வீடாகயிருந்தாலும், பார்ப்பதற்கு அழகான தோற்றம், புதுப் பொலிவுடன் நம்மை வரவேற்பதாக அமையும். எப்படியும் வாசற்கதவு ஓரளவு பாதுகாப்புடன், வலுவுள்ளதாக இருக்கும்படியே அமைப்போம்.

அதில் சிறிய கலை உணர்வையும் சேர்த்துப் படைத்தோமானால், நம் கலை ரசனையுடன் இருப்பதோடு, வருவோர் கவனத்தையும் ஈர்க்கும். மிகவும் எளிய கார்விங் தேர்ந்தெடுத்தால்கூட போதும். பராமரிப்பும் சுலபமாக அமையும். அதற்கான பட்ஜெட்டும் நம்மால் ஈடுகட்டிவிட முடியும். பொதுவாக மாடிப் படிகள் அடிப்புறம் அல்லது பழைய பொருட்கள் வைக்க என ஒரு இடம் இருந்தால் அதை அழகுற சுவர் அலமாரியாக்கி, முழுவதும் வெர்ட்டிகள் பிளைண்ட்ஸ் போட்டு மூடலாம். அப்படி முழுவதும் வெர்ட்டிகள் பிளைண்ட்ஸ் போடும் பொழுது பார்க்கவும் அழகாக தெரிவதுடன், உள்ளே வைத்திருக்கும் எப்பொழுதோ தேவைப்படும் பொருட்கள்கூட பத்திரமாக பாதுகாக்கப்படும். சிறிய வீடுகளில் இது போன்ற சின்னச் சின்ன விஷயங்களைச் செய்து, வீட்டை பார்க்க அழகாக்கி விடலாம்.

வெளிநாடுகளில், ஒவ்வொரு வீட்டிலும் முகப்பிலே ஷூக்கள் வைக்க பயன்படுத்தும் விதத்தில் பல தட்டுகள் வைத்து வெளியே முழுவதும் வெர்ட்டிகள் பிளைண்ட்ஸ் போட்டிருப்பர். வெர்டிகள் பிளைண்ட்ஸ் போடும்போது அறைச் சுவரின் நிறத்திற்கேற்ற பிளைண்ட்ஸ் போட்டு விடலாம். அழகாக இருக்கும். பார்ப்பதற்கு ஓர் அறை போன்று காணப்படுவதுடன், பொருட்களும் பத்திரமாக வைக்கப்படும். உள்ளே நுழைந்தவுடன் ஷூவோ, செருப்புகளோ நம் கண்களில் படுவதில்லை. அது போல் சிறிய வீடாகயிருந்து உள்ளே ஸ்டோரேஜ் வசதியோ, சிறிய அறையோ அல்லது குறிப்பிட்ட இடமோ இருந்தால் அதன் முகப்பில் கதவிலேயே ஒரு பெரிய கண்ணாடி பொருத்தி விடலாம். பொதுவாக சமையலறையை ஒட்டி வரலாம். அல்லது பெட்ரூமை ஒட்டி ஒரு சிறிய இடமாகக் கூட இருக்கலாம்.

இடம் குறைவாக இருந்தாலும், நிறைய மரத்தட்டுக்களோ, சிமென்ட் தட்டுக்களோ அமைத்தால் போதும். எவ்வளவு பொருட்கள் இருந்தாலும் அழகுற அடுக்கி விடலாம். இப்பொழுது நிறைய ஸ்டோரேஜ் பவுச்சுகள் போன்றுகூட கிடைக்கின்றன. உதாரணத்திற்கு கடிதங்கள் வைக்கும் பை போன்று, இருபுறமும் நிறைய அறைகள் கொண்ட பை போன்ற அமைப்பு டிரஸ்ஸர் என்பார்கள். ஸ்டோரேஜ் வசதியில்லாதவர்கள் இது போன்று வாங்கி ஒரு இடத்தில் மாட்டி வைத்தால் போதும். அதில் இருபுறம் உள்அறைகள் போன்ற அமைப்பு, ஒருபுறம் மட்டும் காணப்படுபவை என பிரிவுகள் உண்டு. குழந்தைகள் துணிகள், நாப்கின், டவல் போன்றவற்றை அழகுற அடுக்கலாம். அங்கங்கே அடைத்து வைக்காமல், பார்ப்பதற்கு அழகுடன் இருப்பதுடன், நம் பராமரிப்பும் சுலபமாகி விடும்.

இப்பொழுது, கிச்சன் வால் ஸ்டிக்கர்கள் நிறைய கிடைக்கின்றன. சமையலறை சுவர் பக்கம் டைல்ஸ் மிக அழுக்காக இருக்கிறதா அல்லது பராமரிக்க முடியவில்லையா? சில இடங்களில் கிச்சன் பழைய இடமாக இருக்கலாம். மாடுலர் கிச்சன் போன்று அதிக வசதிகள் இல்லாமல்கூட இருக்கலாம். அப்படிப்பட்ட இடங்களுக்கு டைல்ஸ் ஸ்டிக்கர் வாங்கி ஒட்டி விடுங்கள். பார்க்க சூப்பராக இருக்கும். கண்ணாடி அதிகம் இருந்து உள்ளே ரொம்பவும் வெளிச்சம் அல்லது வெயில் பட்டால்கூட இது போன்ற ஒரே மாதிரியான ஸ்டிக்கர்களை ஒட்டி விடலாம். பின்னால் இருக்கும் பேப்பரை எடுத்துவிட்டால், ஸ்டிக்கர் அப்படியே ஒட்டிக் கொள்ளும். சில இடங்களில் குழந்தைகள் படுக்கும் கட்டில் அருகில் பார்த்தால் சுவரில் ஒரே அழுக்கடைந்து காணப்படும்.

குழந்தைகள் சுவற்றில் கை,கால்களை வைக்கும்பொழுது சுவர் அழுக்காகி விடும். எனவே கட்டிலை ஒட்டி படம் ஏதேனும் ஒட்டிவிட்டால், அழுக்காவதைத் தவிர்க்கலாம். இப்பொழுது நிறைய செடி, கொடிகள் போன்ற ஸ்டிக்கர் வடிவங்களில் கிடைக்கின்றன. இயற்கைக் காட்சிகள் படங்களாக ஒட்டுவதைப் போன்று இலை, கிளை, வேர், பூக்கள் என தனித்தனியாக ஸ்டிக்கர் அமைப்பில் காணப்படுகின்றன. எந்த இடத்தில் என்ன போட வேண்டுமோ, அதை ஆர்டர் செய்து வேண்டிய காட்சிகளை ஒட்டிக் கொள்ளலாம். உதாரணத்திற்கு ஓர் அறையில் இருபுறமும் தென்னை மரம் போன்றும், நடுவில் வேறு புல் வடிவ ஓவியங்களையும் தேர்ந்தெடுத்து ஸ்டிக்கராக ஒட்டிக் கொள்ளலாம். குழந்தைகள் விளையாடும் பசில்ஸ் (Puzzles) போன்று தனித்தனியாக இருக்கும் ஓவியத்தை சேர்த்து ஒட்டிக் கொள்ளலாம்.

வீடு சிறியதாக இருந்தால்கூட அழகாகவும், ரிச்சாகவும், காட்ட நினைத்தால் டூ இன் ஒன் அமைப்பு கொண்ட ஃபேன் கம் லைட் போட்டால் போதும் (Fan cum Light). நடுவில் அழகிய டூம் லைட் போன்று காணப்படும். விளக்கு மட்டும் பயன்படுத்த வேண்டுமானால் அதன் சுவிட்சை மட்டும் அழுத்தினால் போதும். இரண்டையும் ஒரே சமயத்திலும் பயன்படுத்தலாம். பகலில் ஃபேன் மட்டும் பயன்படுத்திக் கொள்ளலாம். இப்படிப் போடுவதன் மூலம் பெரிய பெரிய அலங்கார விளக்குகளுக்கு செலவு செய்வது மிச்சம். சிறிய இடத்தில் அங்கங்கே பாயின்ட் போட்டாலும் அழகாக இருக்காது. மாறாக, இத்தகைய டூ இன் ஒன் அமைப்பே அறைக்கு நல்ல ரிச் லுக் தரும். பெரும்பாலும் மேலை நாடுகளில் இது போன்ற அமைப்புகள் காணப்படுகின்றன.

நிறைய இடங்களில் பலவற்றைப் பொருத்தி, அடைசலான தோற்றத்தைக் குறைத்து, பார்க்க அழகாக, இடமும் விஸ்தாரமாக காட்சியளிக்கும். செலவிடும் பணமும் மிச்சம். இது போல் நாம் டிராயிங் ரூமில் ஷோகேஸ் முக்கியம். சிறிய வீடுகளில் ெபரிய அலமாரிகள் போட்டு இடத்தை அடைக்கத் தேவையில்லை. பெரிய அலமாரிகள் வைக்க வேண்டும் என்பதும் அவசியமில்லை. அறையின் நடு சுவரில் மெல்லிய கண்ணாடித் தட்டுகள் அங்கங்கே பொருத்தினால் போதும். நல்ல விலையுயர்ந்த பொருட்களை மட்டும் காட்சிக்கு வைத்தால் போதும். கண்ணாடியை நன்கு துடைத்து, அழகான பொருட்களை போதிய இடைவெளி விட்டு காட்சியாக்கலாம். பாரம்பரிய பொருட்களை போதிய இடைவெளிவிட்டு வைத்தாலும் அழகாக இருக்கும். இது போல் வாஷ்பேஸின்கள் அடியில் பாக்ஸ் அமைப்புகள், சமையலறை கதவுக்குப் பின் சுவற்றில் இடமிருந்தால், வெளியில் தெரியாமல் இருக்கும் பட்சத்தில் சிறிய மரத்தினாலான பாக்ஸ் அலமாரி அமைத்துக் கொள்ளலாம்.

சமையலறை பாத்திரங்கள் ேபாடும் சிங்க் அடியில் சிறிய பாக்ஸ் போன்று அமைத்துக் கொள்ளலாம். அந்தந்த இடங்களுக்குத் தேவைப்படும் பொருட்களை அங்கங்கே வெளியே தெரியாமல் அடுக்கி வைக்கலாம். பொருட்கள் நிறைந்து காணப்படுவது முக்கியமில்லை. குறைந்த பொருட்களேயானாலும், வீடு சிறியதாகவே இருந்தாலும் அதை வீடு நிறைந்து அழகுற காணப்படுவதுபோல் காட்டுவதுதான் நம் கலைத்திறன். கலைத்திறனும், ரசனையும் இருந்தால் மிகச் சிறிய வீட்டைக்கூட பங்களா போன்று காட்ட முடியும். அதனால்தான், இன்டீரியர் டெகரேஷனில் இடம் மிச்சப்படுத்தவும், பொருட்கள் சேர்த்து வைக்கவும் (Space Saving and Storage) என்பதற்கான நிறைய முக்கியத்துவம் தரப்பட்டுள்ளது. எனவே எப்படி அமைப்பது என யோசித்து உங்கள் இருப்பிடத்தை சொர்க்கமாக மாற்றி விடுங்கள். வீடு நலமாக இருந்தாலே இயல்பாகவே மனதும் மகிழ்ச்சியாக இருக்கும்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post 4 மாவட்டங்களுக்கு மின்சார கட்டணம் செலுத்த கால அவகாசம் !! (உலக செய்தி)
Next post வீட்டில் வளர்க்க வேண்டிய பயன் தரும் மூலிகை செடிகள்! ! (மகளிர் பக்கம்)