முளைகட்டிய கருப்பு கொண்டைக்கடலை சூப்!! (மருத்துவம்)
முளைகட்டிய கொண்டைக்கடலை (கருப்பு) – ஒரு கப்
வெண்ணெய் – ஒரு டீஸ்பூன்
சீரகம் – ஒரு டீஸ்பூன்
சின்ன வெங்காயம் – 50 கிராம்
கறிவேப்பிலை – சிறிதளவு
கொத்தமல்லி – சிறிதளவு
மிளகுத்தூள், உப்பு – தேவையான அளவு
செய்முறை :
சின்ன வெங்காயம், கொத்தமல்லியை பொடியாக நறுக்கி கொள்ளவும்.
கொண்டைக்கடலையை நன்றாக கழுவி 4 மணி நேரம் ஊறவைத்து நன்றாக ஊறியதும் வேகவைத்து கொள்ளவும்.
வேக வைத்த கொண்டைக்கடலையில் சிறிதளவு தனியாக எடுத்து வைத்து கொள்ளவும்.
மீதமுள்ள கடலையை வேகவைத்த தண்ணீருடன் சேர்த்து அரைக்கவும்.
அடிகனமான பாத்திரத்தில் வெண்ணெய்விட்டு உருக்கியதும் சீரகம், கறிவேப்பிலை போட்டு தாளித்த பின்னர் வெங்காயத்தை போட்டு வதக்கவும்.
வெங்காயம் சற்று வதங்கியதும் அதனுடன் அரைத்த கொண்டைக்கடலை விழுது, உப்பு சேர்த்து ஒரு கொதிவிட்டு இறக்கவும்.
மேலே மிளகுத்தூள், தனியாக எடுத்துவைத்த கொண்டைக்கடலை, கொத்தமல்லி சேர்த்துக் கலந்து பருகவும்.
குறிப்பு: இந்த சூப், வளரும் குழந்தைகளுக்கு நல்லது.
Average Rating