வாய்ப்புண்ணை போக்கும் பப்பாளி!! (மருத்துவம்)

Read Time:1 Minute, 57 Second

பப்பாளி மரத்தின் இலைகள், விதைகள், காய், பழம் என அனைத்துமே மருத்துவ குணங்கள் நிறைந்தவை. இந்தப் பழத்தை ‘ஏழைகளின் ஆப்பிள்’ என்றும் வர்ணிக்கின்றனர்.

* பப்பாளிக்காயை கூட்டாகச் செய்து சாப்பிட்டு வந்தால் குண்டான உடல் படிப்படியாக மெலியும்.

* பப்பாளிக்காயின் பாலை வாய்ப்புண் மேல் பூச புண்கள் ஆறும்.

* பப்பாளி இலை சாற்றை பிழிந்து எடுத்து வீக்கங்கள் மேல் பூசி வர வீக்கம் குறையும்.

* பப்பாளி கூட்டை பிரசவித்தப் பெண்கள் சாப்பிட்டால் பால் சுரப்பு கூடும்.

* பப்பாளிப்பழத்தை குழந்தைகளுக்கு கொடுத்து வந்தால் உடல் வளர்ச்சி ஏற்படும். எலும்பு வளர்ச்சி ஆகும். பல் உறுதிப்படும்.

* பப்பாளியை தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் பார்வை திறன் அதிகரிக்கும்.

* பப்பாளி இலைகளை அரைத்து கட்டிமேல் கட்டிவர கட்டி உடையும்.

* பப்பாளியின் விதைகளை அரைத்து பாலில் கலந்து சாப்பிட்டால் வயிற்றிலுள்ள பூச்சிகள் நீங்கும்.

* நன்கு பழுத்தப்பழத்தை கூழாக செய்து தேன் கலந்து முகத்துக்கு பூசி ஊறின பின் சுடுநீரில் கழுவ முகச்சுருக்கம் மாறி முகம் அழகு பெறும்.

* உடலில் இறந்துபோன செல்களை நீக்கவும், தோலை பளபளப்பாக வைக்கவும் பப்பாளி சிறந்த மருந்தாகும். எனவே பப்பாளியை உணவில் சேர்த்துக் கொண்டால் பல பயன்கள் கிடைக்கும்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post ‘குரங்கின் கை பூமாலை’யான கூட்டமைப்பு !! (கட்டுரை)
Next post மரபணு மாற்ற உணவுகள்…!! (மருத்துவம்)