தமிழகத்திற்கு செல்லும் அகதிகளின் எண்ணிக்கை அதிகரிப்பு
Read Time:1 Minute, 5 Second
இலங்கையிலிருந்து நேற்று 234அகதிகள் தமிழகம் சென்றடைந்துள்ளனர். ஒரேநாளில் பெருமளவான அகதிகள் தமிழகத்தை சென்றடைந்தமை இதுவே முதற்தடவை என்று தெரிவிக்கப்படுகிறது.
இராமேஸ்வரம் பகுதிக்கு அண்மையில் உள்ள அரிச்சல்முனை, சரன்கோட்டை ஆகிய பகுதிகளிலேயே படகுகளில் சென்ற அகதிகள் கரை சேர்ந்துள்ளனர். கடந்த மூன்றுமாத காலப்பகுதியில் 1200ற்கு மேற்பட்ட அகதிகள் தமிழகம் சென்றடைந்துள்ளனர். நேற்று முன்தினம் 80அகதிகள் தமிழகம் சென்றுள்ளனர். வேலைக்குச் செல்லும் நாம் உயிருடன் திரும்பி வருவோமா என்று குடும்பத்தினர் ஏங்கும் நிலையைப் போக்கி நிம்மதியை அவர்களுக்கு வழங்கவே இந்தியா வந்தோமென்று அகதியாக வந்த ஒருவர் தெரிவித்துள்ளார்.