பிரான்சு நாட்டில் ரெயில்கள் மோதலில் 12 பேர் பலி

Read Time:1 Minute, 15 Second

FranceFlags.gifபிரான்சு நாட்டில் சூப்ட்கென் என்ற இடத்தில் ஒரே ரெயில் பாதையில் எதிரும் புதிருமாக வந்த 2 ரெயில்கள் மோதிக் கொண்டன. இதில் 12 பேர் பலியானார்கள். லக்சம்பர்க் நாட்டில் இருந்து பிரான்சு நாட்டில் உள்ள நான்சி என்ற இடத்துக்கு ஒரு பயணிகள் ரெயில் புறப்பட்டது. அந்த ரெயில் மீது ஒரு சரக்கு ரெயில் மோதியது. இதில் 2 ரெயில்களின் என்ஜின் டிரைவர்கள் உள்பட 12 பேர் பலியானார்கள். பக்கத்து ரெயில் பாதையில் பராமரிப்பு வேலை நடப்பதால் 2 ரெயில்களும் ஒரே ரெயில்பாதையில் செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டது. பிரஞ்சு கரீபியன் நாட்டுக்கு செல்வதற்காக விமானத்தில் பயணம் செய்த பிரதமர் டொமினிக் டிவில்லேபின் வெளிநாட்டு பயணத்தை ரத்து செய்து விட்டு பிரான்சு நாட்டுக்கு திரும்பினார்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %
Previous post போர் கைதிகளாக பிடிபட்ட 74 சிப்பாய்களை புலிகள் கொன்றுவிட்டனர் இலங்கை அரசு குற்றச்சாட்டு
Next post ஆட்சியில் பங்கு: ரணிலுக்கு ராஜபக்ஷே அழைப்பு!