படையினருக்கும் புலிகளுக்கும் இடையே கிழக்கிலும் மோதல்
விடுதலைப் புலிகளின் அம்பாறை மாவட்ட அரசியல் துறை பொறுப்பாளர் ஜெயா இலங்கையின் கிழக்கே அம்பாறை மாவட்டத்திலும் விடுதலைப் புலிகளின் இலக்குகளை நோக்கி இன்று படை நடவடிக்கையொன்று நடை பெற்றுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த நடவடிக்கை காரணமாக விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டிற்கு உட்பட்ட கஞ்சிக்குடிச்சாறு பிரதேசத்தை நோக்கி விசேட அதிரடிப் படையினர் முன்னேறியிருப்பதாகவும் கூறப்படுகின்றது.
இது தொடர்பாக புலிகளின் அம்பாறை மாவட்ட அரசியல் துறை பொறுப்பாளர் ஜெயா
விமானத் தாக்குதல்கள் மற்றும் எறிகணைத் தாக்குதல்கள் காரணமாக மக்கள் குடியிருப்புகள் சேதமடைந்துள்ளதாக கூறினார். இந்த படை நடவடிக்கை குறித்து ஏற்கனவே போர் நிறுத்தக் கண்காணிப்புக் குழுவிடம் முறையிடப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
தமது நிலைகளை நோக்கி விடுதலைப் புலிகளினால் தாக்குதல் நடத்தப்பட்டதன் காரணமாகவே தங்களால் பதில் நடவடிக்கையொன்று மேற் கொள்ளப்பட்டதாக படைத் தரப்பு கூறுகின்றது