இது இன்னோர் அதிசயம் !! (மருத்துவம்)

Read Time:2 Minute, 40 Second

மனித உடலின் ஆச்சரியங்கள் சொல்லித் தீராதது. அதனால்தான் நவீன அறிவியலும் அதனைக் கண்டு எந்த முடிவுக்கும் வர முடியாமல் திகைத்துப் போய் விடுகிறது. அப்படி ஒரு கண்டுபிடிப்பைத்தான் சமீபத்தில் New music research இதழ் வெளியிட்டுள்ளது. இசையின் வகைக்கு அப்பாற்பட்டு, ஒவ்வொரு நபரின் நடன அசைவும் தனித்துவமான கையொப்பத்தைக் கொண்டுள்ளது. இதை ஒரு கம்ப்யூட்டர் மூலம் துல்லியமாக அடையாளம் காண முடியும் என்று கூறியிருக்கிறது சமீபத்திய ஆய்வு. இசை மனிதர்களை எவ்வாறு பாதிக்கிறது என்பதைப் பற்றிய ஆழமான புரிதலுக்கு வழிவகுக்கும் இந்த ஆய்வு வழிவகுக்கலாம்.

ஹாலிவுட்டில் பயன்படுத்தப்படும் மோஷன் கேப்சர் தொழில்நுட்பத்தின் மூலம் ஒரு மனிதனின் நடன அசைவுகளை வைத்து அவரின் அப்போதைய மனநிலை, வெளிப்படைத்தன்மை, நரம்பியல் மற்றும் அவர்கள் மற்றவர்களுடன் எவ்வளவு பரிவு காட்டுகின்றனர் போன்றவற்றை கண்டுபிடிக்க முடியும்’ என்ற ஆய்வறிக்கைதான் அது. ‘முதலில் இந்த ஐடியா எங்களுக்கு வரவில்லை. இந்த ஆய்வில் பங்கு கொள்பவர்கள் வெவ்வேறு விதமான இசைக்கு எப்படி தங்கள் அசைவுகளை வெளிப்படுத்துகிறார்கள் என்பதை கண்டறிவதற்காகத்தான் ஆய்வு மேற்கொண்டோம்’ என்கிறார் ஃபின்லாந்தின் ஜிவாஸ்கிலா பல்கலைக்கழகத்தின் தலைமை ஆய்வாளரான எமிலி கெரிசன்.

மேலும் இந்த ஆய்வில் பங்குபெற்ற 73 பேர்களிடத்தில் பாப், ஜாஸ் என வெவ்வேறு விதமான இசைகள் ஒலிக்கப்பட்டு நடனமாட வைக்கப்பட்டு, அவர்களின் அசைவுகளை கம்ப்யூட்டரில் பதிவு செய்தோம். பின்னர் மோஷன் கேப்சர் தொழில்நுட்பத்தினைப் பயன்படுத்தி ஆய்வு செய்ததில், அது எந்த வகையான இசை வகையாக இருந்தாலும், ஒவ்வொருவரின் நடன அசைவுகளும், மனிதனின் கைரேகையைப் போலவே தனித்துவமாக இருந்தது தெரிய வந்தது’ என்கிறார்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post காசநோய்க்கு புதிய சிகிச்சை!! (மருத்துவம்)
Next post மூளையின் திறன் மேம்பட எளிய பயிற்சிகள்!! (மருத்துவம்)