காசநோய்க்கு புதிய சிகிச்சை!! (மருத்துவம்)

Read Time:2 Minute, 38 Second

Tuberclosis என்கிற காசநோய்க்கு தோலின் வழியாகவே ஊசி போடப்படுகிறது. ஆனால், தற்போதைய புதிய ஆய்வின்படி காசநோய்களுக்கான மருந்துகளை நரம்பு வழியாக செலுத்தப்படும்போது அதிகமாக உயிர் காக்கும் தன்மையையும், நுரையீரல் தொற்றுக்கு எதிராக உயிர்காக்கும் தன்மையை பெறுகிறோம் என்று கண்டுபிடித்திருக்கிறார்கள். உலகில் சராசரிக்கும் அதிகமான மக்கள் காசநோய்க்கு எதிரான தடுப்பூசிகளை அல்லது மருந்துகளை எடுத்துக் கொள்கின்றனர்.

மேலும், மிக அதிக மக்கள் இவ்வகையான நோய்க்கு ஆளாகி உள்ளனர். மேலும் அதிகளவில் மக்கள் மற்ற வகை நோய்களால் இறக்கும் விகிதத்தைவிட காசநோயால் இறப்பவர்களின் விகிதம் அதிகமாக உள்ளது. இதன் மூலம் இத்தகைய மருந்துகள் நம்பகத்தன்மை அற்றதாக முடிவுக்கு வந்துவிடுகிறார்கள். இத்தகைய சூழலில் இந்த புதிய ஆராய்ச்சி நம்பிக்கை அளிப்பதாக உள்ளது.

Journal nature என்ற பத்திரிகையில் வெளியாகி உள்ள ஆய்வுக் கட்டுரையில் விஞ்ஞானிகள், எளிமையான மாற்று வழிமூலம் இவ்வகை மருந்துகளை செலுத்துவதினால் இதன் வீரியத் தன்மையை சீராக அதிகப்படுத்தி, நோயிலிருந்து நம்மை காப்பாற்ற முடியும் என்று நிரூபித்து உள்ளனர். நரம்பு மூலமாக இவ்வகை மருந்துகளை விலங்குகளுக்கு செலுத்தி ஆய்வு செய்யும்போது, ஒரு லட்சம் பாக்டீரியாக்கள் அழிந்து குறைந்து காணப்படுவதாகவும், தோலின் வழியே செலுத்தும் மருந்துமுறையைவிட ஒப்பிட்டு பார்க்கும்போது நல்ல பலனை தருகிறது என்றும் கூறியிருக்கின்றனர். 10 பேரில் 9 பேருக்கு நரம்பு வழியாக செலுத்தும்போது எலும்பு உருக்கிக்கான அறிகுறிகள் நுரையீரலில் இல்லை என்ற முடிவுகளையும் பெற்றுள்ளனர் என்றும் மகிழ்ச்சி தெரிவித்துள்ளனர்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post ஆப்பிளை இப்படி சாப்பிடுவது உயிருக்கு ஆபத்து… !! (கட்டுரை)
Next post இது இன்னோர் அதிசயம் !! (மருத்துவம்)