சமையல் எரிவாயு சிலிண்டா் விலை அதிகரிப்பு!! (உலக செய்தி)

Read Time:1 Minute, 49 Second

சென்னையில் சமையல் எரிவாயு சிலிண்டர் விலை மேலும் ரூ.25 அதிகரித்து ரூ.835க்கு விற்பனை செய்யப்படுகிறது.

சா்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலையில் ஏற்படும் மாற்றம் மற்றும் அந்நியச் செலாவணிக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு ஆகியவற்றின் அடிப்படையில், சமையல் எரிவாயு உருளையின் விலையை எண்ணெய் நிறுவனங்கள் அவ்வப்போது மாற்றியமைத்து வருகின்றன.

இதன்படி, மானியமில்லா சமையல் எரிவாயு உருளையின் விலை இன்று மீண்டும் ரூ.25 உயா்த்தப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. கடந்த பிப்ரவரியில் மட்டும் ரூ.100 விலை உயர்ந்த நிலையல் இன்று மேலும் ரூ.25 அதிகரித்துள்ளது.

இன்று முதல் அமலுக்கு வந்த இந்த விலையேற்றத்தின்படி சென்னையில் ஒரு சமையல் எரிவாயு உருளையின் விலை ரூ.810-லிருந்து உயர்ந்து ரூ.835-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

கடந்த ஜனவரியில் ரூ.710ஆக இருந்த எரிவாயு சிலிண்டர் விலை ரூ.125 உயர்ந்து தற்போது ரூ.835ஆக அதிகரித்துள்ளது.

ஒரு புறம் சமையல் எரிவாயு உருளையின் விலையும், மற்றொரு புறம் பெட்ரோல், டீசல் விலையும் அதிகரித்து வருவது ஏழை, எளிய மக்களுக்க மென்மேலும் பொருளாதாரச் சுமையை அதிகரிப்பதாக பொதுமக்கள் வேதனை தெரிவித்தனா்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post பலமான தலைவர்களும் பலமான நிறுவனங்களும் !! (கட்டுரை)
Next post சிறையில் இருந்து 400 கைதிகள் தப்பியோட்டம் !! (உலக செய்தி)