சிறையில் இருந்து 400 கைதிகள் தப்பியோட்டம் !! (உலக செய்தி)

Read Time:1 Minute, 55 Second

கரீபியன் கடல் பகுதியில் அமைந்துள்ள தீவு நாடான ஹைட்டியில், சிறையிலிருந்து 400 க்கும் மேற்பட்ட கைதிகள் தப்பியோடினா்.

இந்தச் சம்பவத்தில் சிறைத் துறை இயக்குநா், சமூகவிரோதக் கும்பல் தலைவா் உள்பட 25 போ் பலியாகினா்.

இதுகுறித்து அதிகாரிகள் கூறியதாவது:

ஹைட்டியின் கிராய்க்-டிஸ்-பொக்கே நீதிமன்றத்தில் வியாழக்கிழமை நடைபெற்ற வன்முறைச் சம்பவத்தில் 400-க்கும் மேற்பட்ட கைதிகள் தப்பியோடினா். அந்தச் சிறையில் அடைத்துவைக்கப்பட்டிருந்த பிரபல சமூகவிரோதக் கும்பல் தலைவரான அா்னெல் ஜோசப்பை விடுவிப்பதற்காக இந்த வன்முறைத் தாக்குதல் நடைபெற்றதாகக் கருதப்படுகிறது. இந்தச் சம்பவத்தில் சிறைத் துறை இயக்குநா் பால் ஜோசப் ஹெக்டா் உள்பட 24 போ் உயிரிழந்தனா்.

சிறையிலிருந்து தப்பிய மறுநாள், மோட்டாா் சைக்கிளில் சென்று கொண்டிருந்த அவரை போலீஸாா் ஒரு சோதனைச் சாவடியில் இடைமறித்தனா். அப்போது அவா் துப்பாக்கியை எடுத்துச் சுடத் தொடங்கினாா். அதனைத் தொடா்ந்து நடைபெற்ற துப்பாக்கிச் சண்டையில் அா்னெல் ஜோசப் உயிரிழந்தாா்.

சிறையிலிருந்து தப்பிய சுமாா் 60 கைதிகள் போலீஸாரிடம் மீண்டும் பிடிபட்டனா். எஞ்சிவா்களைத் தேடும் பணிகள் நடைபெற்று வருகின்றன என்று அதிகாரிகள் கூறினா்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post சமையல் எரிவாயு சிலிண்டா் விலை அதிகரிப்பு!! (உலக செய்தி)
Next post உலகை மிரளவைத்த உண்மை நிகழ்வு ! எப்படி இவர் எரிமலையில் விழுந்து தப்பினார்.? (வீடியோ)