பெண்கள் ஆணிடம் எதிர்பார்க்கும் சுவாரஸ்ய விஷயங்கள்! (கட்டுரை)

Read Time:5 Minute, 16 Second

ஆண்கள் எப்போதுமே ரொமாண்டிக்காக இருக்க விரும்புவது இயல்பு. குறைந்தபட்சம் தங்களது 25 வயது வரைக்குமாவது ரொமாண்டிக் லுக்கில் இருக்க விரும்புவார்கள். இதற்கு காரணம் பெண்கள் தான். பெண்களுக்கு ரொமாண்டிக்காக இருந்தால் தான் பிடிக்கும் என்று யாரோ, எப்போதோ, கொளுத்திப் போட்ட திரியினால், இன்று வரை இந்த எண்ணம் ஆண்களின் மனதில் கொழுந்துவிட்டு எரிந்துக் கொண்டிருக்கிறது.

ஆனால், இதைப் பற்றி பெண்களிடம் கேட்டால், “நாங்க எப்போ அப்படி சொன்னோம்..??” என்று குண்டை தூக்கி போடுகிறார்கள். ஆம், ரொமாண்டிக் என்பதையும் தாண்டி பெண்கள் ஆண்களிடம் சில சுவாரஸ்யமான விஷயங்களை எதிர்பார்கிறார்கள்.

பெண்கள் தான் இதை சுவாரசியம் என்கிறார்கள், உங்கள் பார்வையில் இது எப்படி இருக்கிறது என்று நீங்களே கூறுங்கள்….

காது கொடுத்து கேட்க வேண்டும்
தாங்கள் பேசுவதை காது கொடுத்து கேட்க வேண்டும். பேச, பேச, குறுக்கே பேசுவது, முழுதாய் புரிந்துக் கொள்ளாமல் காச்சுமூச்சென கத்தக் கூடாது என பெண்கள் எதிர்பார்க்கிறார்கள்.

சுதந்திரமாக இருக்க வேண்டும்
அவனும் சுதந்திரமாக இருக்க வேண்டும், எங்களையும் சுதந்திரமாக இருக்க அனுமதிக்க வேண்டும். வேலை, சுய விருப்பங்கள் போன்றவற்றில் தலையீடுகள் இருக்க கூடாது என எதிர்பார்க்கிறார்கள்.

நடைமுறைக்கு ஏற்று நடப்பவர்
கண்டதை பேசி நேரத்தை வீணடிக்காமல், மூட நம்பிக்கைகள் இன்றி, நடைமுறைக்கு ஏற்றார் போல வாழும் நபர்களை எதிர்பார்க்கிறார்கள் தற்போதைய பெண்கள்.

தன்னிச்சையாக செயல்பட கூடியவர்கள்
எந்த செயலாக இருந்தாலும், மற்றவர் உதவியை எதிர்பாராமல் தனிச்சையாக செயல்பட கூடிய ஆண்களை மிகவும் பிடிக்குமென பெண்கள் கூறுகிறார்கள்.

நேர்மறை எண்ணம்
எதற்கெடுத்தாலும், எதிர்மறையாக பேசவது, ஏதாவது செய்யும் போது “இது சரியாக வருமா???” என கேள்விகள் கேட்பது என இல்லாமல், நேர்மறை எண்ணங்களுடன் இருக்க வேண்டும் என்று விரும்புகிறார்கள் பெண்கள்.

உறுதுணையாக இருப்பவர்கள்
என்ன சூழ்நிலையாக இருந்தாலும் தங்களோடு, தங்களுக்கு உறுதுணையாக இருப்பவர்களே எங்களுக்கு வாழ்க்கை துணையாக இருக்க வேண்டும் என விருப்பப்படுகிறார்கள் பெண்கள். இந்த குணாதிசயம் மிகவும் முக்கியமானது என்றும் கூறுகிறார்கள்.

அன்பானவன்
ஏதேனும் தவறு செய்தால் கூட அதை குத்திக் காண்பிக்காது, அன்பாக எடுத்துரைக்கும் ஆண்கள் தான் சிறந்தவர்களாம். இவர்கள் தான் இதய பூர்வமாக பழகுவார்கள் என நம்புகிறார்கள் பெண்கள்.

ஜென்டில்மேன்
நல்ல பண்புடையவராக, மற்றவர்களுக்கு நல்லது செய்யாவிடினும், கேடு நினைக்காமல் இருக்க வேண்டும். குறைந்தபட்சம் தான் உண்டு, தன் வெளியுண்டு என்றிருந்தால் கூட போதும் என்கிறார்கள் பெண்கள்.

நேர்மையானவர்
இது தான் மிகவும் முக்கியமானது என்கிறார்கள் பெண்கள். சரியோ, தவறோ, எப்போதும் நேர்மையாக இருக்க வேண்டும் என்கிறார்கள்.சிறந்த ஆணுக்கான இலக்கணமே நேர்மைதானம். (சரி இதே கேள்விய பசங்க திருப்பி கேட்டா என்ன பண்ணுவீங்க

முதிர்ச்சியான ஆண்
மனதளவில் முதிர்ச்சியாக இருக்க வேண்டும். என்ன செய்தாலும், ஒருமுறைக்கு நான்கு முறை யோசித்தால் கூட பரவாயில்லை. ஆனால், எடுக்கும் முடிவு சரியானதாக இருக்க வேண்டும். செயலில் இறங்கிய பிறகு யோசிப்பது தவறு. வெளி வேலைகளில் மட்டுமின்றி வீட்டிலும் கூட இதை கடைப்பிடிக்க வேண்டும் என எதிர்பார்கிறார்கள் பெண்கள்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post ஆயுதமல்ல அந்தரங்க உறவு!! (அவ்வப்போது கிளாமர்)
Next post ஐ நெவர் கிரை!! (மகளிர் பக்கம்)